என் மலர்

  ஆன்மிகம்

  மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
  X
  மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

  துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை உடனான மயூரநாதர்கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்ந ஆண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18-ந் தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கியது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டமும் நடந்தது. முன்னதாக. அபயாம்பிகையுடன் மயூரநாதர், பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

  இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 3 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.
  Next Story
  ×