search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் வில் அம்பு எய்தல் விழா
    X
    திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் வில் அம்பு எய்தல் விழா

    திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் வில் அம்பு எய்தல் விழா

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வில் அம்பு எய்தல் நிகழ்ச்சியையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவிற்கு மறுநாள் வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.இதற்காக கோவிலில் இருந்து முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வெள்ளியிலான வில், அம்புவை ஏந்தியபடி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து பசுமலையில் உள்ள அம்பு ஏய்தல்மண்டபத்திற்கு செல்லுவதும், மண்டபத்தை 3 முறை வலம் வந்து வில் அம்பு ஏய்தல் செய்வதும் வழக்கம்.

    ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் பசுமலையில் உள்ள மண்டபத்திற்கு செல்லுவது தவிர்க்கப்பட்டது. இதே சமயம் கோவிலுக்குள்ளே உள்திருவிழாவாக வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.
    Next Story
    ×