என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்ப விருட்சம், சர்வ பூபால வாகன சேவை
    X
    கல்ப விருட்சம், சர்வ பூபால வாகன சேவை

    திருமலையில் பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்சம், சர்வ பூபால வாகன சேவை

    திருமலை பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உற்சவர் மலையப்பசாமி, ‘ராஜமன்னார்’ அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் கோவிலில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உற்சவர் மலையப்பசாமி, ‘ராஜமன்னார்’ அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனச் சேவையில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரசாந்திரெட்டி, சனத்குமார், முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×