என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவர் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
    X
    உற்சவர் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

    திருப்பதியில் கருட பஞ்சமியையொட்டி நடந்த கருடசேவை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கருட பஞ்சமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் கருட சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர் ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    2-வது கருட சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியையொட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது. மேற்கண்ட இரு கருட சேவை நிகழ்ச்சிகளில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    Next Story
    ×