என் மலர்
ஆன்மிகம்

திருமலையில் பல்லவோற்சவம்
திருமலையில் பல்லவோற்சவம்
உற்சவர்களுக்கும், மைசூரு மகாராஜாவின் உருவப்படத்துக்கும் மைசூரு சமஸ்தானம், கர்நாடக மாநில அரசு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்புப்பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
மைசூரு மகாராஜா பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள கர்நாடக சத்திரத்தில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பல்லவோற்சவம் நடந்தது. கோவிலில் சகஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கர்நாடக சத்திரத்துக்கு ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வைத்தனர். அங்கு உற்சவர்களுக்கும், மைசூரு மகாராஜாவின் உருவப்படத்துக்கும் மைசூரு சமஸ்தானம், கர்நாடக மாநில அரசு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்புப்பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மைசூரு அரண்மனை மகாராணி பிரமோதாதேவி உடையார், கர்நாடக மாநில வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் மஞ்சுநாத்பிரசாத், வருவாய் ஆணையர், ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மைசூரு அரண்மனை மகாராணி பிரமோதாதேவி உடையார், கர்நாடக மாநில வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் மஞ்சுநாத்பிரசாத், வருவாய் ஆணையர், ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story