என் மலர்

  ஆன்மிகம்

  கும்பாபிஷேகம்
  X
  கும்பாபிஷேகம்

  சேத்தியாத்தோப்பு அருகே மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெல்லிக்கொல்லை கிராமத்தில் மகாமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெல்லிக்கொல்லை கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.

  இதையொட்டி நேற்று முன்தினம் யாகசாலையில் முதல் கால பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று காலை 2-ம் கால பூஜை, கோ பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து மகாமாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

  பின்னர் விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×