என் மலர்

  ஆன்மிகம்

  மாரியம்மன் கோவில் ஆலமரத்தில் பால் வடிந்த அதிசயம்
  X
  மாரியம்மன் கோவில் ஆலமரத்தில் பால் வடிந்த அதிசயம்

  மாரியம்மன் கோவில் ஆலமரத்தில் பால் வடிந்த அதிசயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பால் வடியும் ஆலமரத்துக்கு பட்டு வஸ்திரம் சாத்தி, பால் வடிந்த இடத்தில் மஞ்சள், குங்குமத்தால் சூலம் போல் கோலமிட்டு பொங்கல் வைத்தனர். பம்பை, உடுக்கை அடித்து ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபட்டனர்.
  கண்ணமங்கலம் அருகே சின்னபுத்தூர் மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவில் எதிரே பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஆலமரத்தின் கிளையில் திடீரெனப் பால் வடிந்தது.

  இந்தத் தகவல் காட்டுத்தீ போல் பரவியதும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் கோவில் முன்பு திரண்டு அம்மனை வழிபட்டனர். ஒருசிலர் பால் வடியும் ஆலமரத்துக்கு பட்டு வஸ்திரம் சாத்தி, பால் வடிந்த இடத்தில் மஞ்சள், குங்குமத்தால் சூலம் போல் கோலமிட்டு பொங்கல் வைத்தனர். பம்பை, உடுக்கை அடித்து ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபட்டனர்.

  அப்போது ஓரிரு பெண்கள் அருள் வந்து ஆடினர். அவர்களிடம் பக்தர்கள் அருள்வாக்கு கேட்டனர். சாமி ஆடிய பெண்கள், கடந்த 2 ஆண்டுகளாக அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடத்தவில்லை. விரைவில் முறைப்படி திருவிழா நடத்த வேண்டும், எனக் கூறினர்.

  இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆலமரம் பால் வடியும் மரமாகும். அதன் கிளைகளில் வெடிப்பு ஏற்பட்டாலோ, இலைகளை கிள்ளினாலோ பால் போன்ற ஒரு திரவம் வடியும். இருப்பினும், ஆலமரத்தில் பால் வடிந்தது ஆச்சரியமாக உள்ளது, என்றனர்.
  Next Story
  ×