என் மலர்

  ஆன்மிகம்

  சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்த போது எடுத்தபடம்
  X
  சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்த போது எடுத்தபடம்

  அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம்: அம்பாளுடன் உலா வந்த உற்சவர் சந்திரசேகரர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. 5-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.
  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

  இதில் தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவும் ஒன்று. சூரியன் வடகிழக்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் மாத தொடக்கத்தில் இந்த திருவிழா நடைபெறும்.இதனை ஆனி பிரம்மோற்சவ விழா என்பார்கள்.

  கடந்த 7-ம் தேதி அருணாசலேஸ்வரர்  மூலவர் சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க ஆனி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

  5-ம் நாள் விழாவான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார். இதில் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தட்சிணாய புண்ணிய காலம் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் தினமும் 5-ம் பிரகாரத்தில் காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி -அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

  Next Story
  ×