என் மலர்

  ஆன்மிகம்

  ஸ்ரீகாளஹஸ்தியில்ருன கணபதி கோவில் கும்பாபிஷேகம்
  X
  ஸ்ரீகாளஹஸ்தியில்ருன கணபதி கோவில் கும்பாபிஷேகம்

  ஸ்ரீகாளஹஸ்தியில் ருன கணபதி கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான ருன கணபதி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்ணாவூதி, பிரதான கலச பூஜை, நைவேத்தியம், தீபாராதனை நடந்தது.
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான ருன கணபதி கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி காலை 8 மணிக்கு 4-ம் கால பூஜை, பூர்ணாவூதி, பிரதான கலச பூஜை, நைவேத்தியம், தீபாராதனை நடந்தது.

  அதைத்தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை ருன கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலின் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மூலவர் ருன கணபதிக்கு மகா அபிஷேகமும், சிறப்புப்பூஜைகளும் நடந்தது.

  கும்பாபிஷேகத்தில் சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி தம்பதியர் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×