என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெள்ளி குதிரை வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.
    X
    வெள்ளி குதிரை வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

    ஊஞ்சல் திருவிழா: வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆனி மாத ஊஞ்சல் உற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று வெள்ளி குதிரை வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.
    கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு, கடந்த மாதத்தில் இருந்து தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இதனால் கோவிலில் தரிசனமும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ரத்தானதும், அதன்தொடர்ச்சியாக பல பெரிய கோவில்களில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சிதிருக்கல்யாணம் மட்டும் கோவிலின் உள்ளேயே மிக எளிமையாக நடத்தப்பட்டது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும், அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆனிமாத ஊஞ்சல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா கோவில் உள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த திருவிழாவின் 2-ம் நாளில் ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை எழுந்தருளினர்.

    6-வது நாளான 21-ம்தேதி சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    23-ம் தேதி 9-ம் நாள் திருவிழாவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    ஆனி மாத ஊஞ்சல் உற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று வெள்ளி குதிரை வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

    இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×