search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீகாளஹஸ்தி
    X
    ஸ்ரீகாளஹஸ்தி

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரம் நீட்டிப்பு

    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம். ஆனால் கோவிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோவில் சார்பாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கும்.
    ஸ்ரீகாளஹஸ்தி

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:-

    ஆந்திர அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியில் வந்து பல்வேறு பொருட்களை வாங்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கில் தளர்வு செய்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை நேரத்தை நீட்டித்துள்ளது.

    இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இனிமேல் தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம். ஆனால் கோவிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் பக்தர்கள் அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×