என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி வழிபடும் பக்தர்கள்
    X
    பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி வழிபடும் பக்தர்கள்

    பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி வழிபடும் பக்தர்கள்

    அரசின் தடை அறிவிப்பு இருந்தாலும் பழனிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர்.
    கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மலையடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த கடைகள், அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள் என பெரும்பாலான கடைகள் பூட்டியே உள்ளன. இதனால் அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் என்றால், அரசின் தடை அறிவிப்பு இருந்தாலும் பழனிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு முடிதிருத்தும் தொழிலாளரை அழைத்து வருகின்றனர்.

    பின்னர் பழனி அடிவார பகுதியில் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். அதன் பின்பு குடும்பத்துடன் முருகன் கோவில் நுழைவு பகுதியான பாதவிநாயகர் சன்னதி முன்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர்.
    Next Story
    ×