என் மலர்
ஆன்மிகம்

வள்ளியூர் முருகன் கோவில்
வள்ளியூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா தள்ளிவைப்பு
வள்ளியூர் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி நடக்கவிருந்த கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், கும்பாபிஷேகத்துக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற குகைக்கோவில்களில் வள்ளியூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இக்கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கும்பாபிஷேக யாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா தொற்று 2-ம் கட்ட பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதனால் வருகிற 25-ந் தேதி நடக்கவிருந்த கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், கும்பாபிஷேகத்துக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கோவில் செயல் அலுவலர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.

Next Story