search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் தேரோட்டம்
    X
    அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் தேரோட்டம்

    அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் தேரோட்டம்

    அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
    அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் செடல் தேரோட்ட பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அம்மனுக்கு செடல் போட்டு பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×