search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
    X
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதியில் புது பஞ்சாங்கம் வாசிப்பு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி கோவில் உள்புறம் மற்றும் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சாமிக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

    இதையொட்டி கோவில் உள்புறம் மற்றும் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்க பட்ட பல்லக்கில் கொண்டு வந்து கொடிமரம் அருகே வைத்து மந்திரங்கள் ஓதி இந்த ஆண்டிற்கான புது பஞ்சாங்கம் படிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    நேற்று காலை முதல் இரவு வரை 39 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 17,258 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியிருந்தது.

    இதேபோல் சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கோதண்ட ராமர் கோவில், கோவிந்தராஜ சாமி கோவில் கபிலேஸ்வரர் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் காளகஸ்தி சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
    Next Story
    ×