என் மலர்

  ஆன்மிகம்

  உச்சினிமாகாளி அம்மன்
  X
  உச்சினிமாகாளி அம்மன்

  நெல்லை உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை டவுன் பாரதியார் தெரு உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் 74-வது கொடை விழாவையொட்டி வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
  நெல்லை டவுன் பாரதியார் தெரு உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் 74-வது கொடை விழா நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 13-ந்தேதி காலையில் ஹோம பூஜையும், 7 மணிக்கு பால்குடம் புறப்படுதலும், 11 மணிக்கு கும்ப பூஜை, 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.

  அதைத்தொடர்ந்து மதியக்கொடையும், பேச்சியம்மன் அழைப்பும், சுடலை மாடன் வரத்தும், தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு தாமிரபரணியில் இருந்து அக்னி பூச்சட்டி, கும்பங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் சித்திரை விசு அன்னாபிஷேகம் நடக்கிறது. 19-ந்தேதி இரவு 8 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் ரீதி உலாவும், 20-ந்தேதி தாமிரபரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
  Next Story
  ×