search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குற்றாலநாதர் சுவாமி கோவில்
    X
    குற்றாலநாதர் சுவாமி கோவில்

    குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா இன்று தொடங்குகிறது

    தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
    தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா ஆகியவை நடக்கின்றன. வருகிற 8-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.

    11-ந் தேதி காலை 9-30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 14-ந் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரியும் உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×