
இதில் நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை நடக்கிறது. 8 மணிக்கு அகில திரட்டு அம்மானை ஒப்புவித்தலும், 9 மணிக்கு அய்யாவின் சிறப்பு பணிவிடை, நடன விளையாட்டு மற்றும் அன்னதானம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அன்னை சிவகாமி சால் அய்யா வைகுண்டர் அருள் ஞானபதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.
அய்யாவின் அவதார திருவிழா தாராவியின் பிற பகுதிகள், மலாடு, காட்கோபர், மலாடு, பிவண்டி பகுதியிலும் நடக்கிறது.