என் மலர்

  ஆன்மிகம்

  அய்யா வைகுண்டர்
  X
  அய்யா வைகுண்டர்

  மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் வைகுண்டர் அவதார விழா 3-ந்தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் லே- அவுட்டில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
  பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் லே- அவுட்டில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டரின் அவதார தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.

  இதையொட்டி அன்று இரவு 12 மணிக்கு சிறப்பு பணிவிடைகள் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 1 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமியின் அருள்பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.

  விழாவில் பங்கேற்கும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் உள்பட அனைவரும் சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×