
அந்த வகையில் அய்யனார், செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல், செடல் உற்சவம், தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஆழத்து விநாயகர் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் தேர் திருவிழாவும், நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சியும், 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27- ந்தேதி தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.