
இதையொட்டி வருகிற 25-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. 26-ந் தேதி யாகபூஜைகள், கோபூஜை, பூர்ணாகுதியை தொடர்ந்து 27-ந்தேதி காலை (புதன்கிழமை) 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் சபாநாயகர் சபாபதி என்ற கோதண்டராமன், முன்னாள் அமைச்சர் ஜெய குமார், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் சச்சிதானந்தம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.