search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாரம்மன்
    X
    முத்தாரம்மன்

    புதுக்கடை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது

    புதுக்கடை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
    புதுக்கடை, வடக்கு தெருவில் அரசமூடு ஈஸ்வர பூதத்தான் கோவில், வீரமார்த்தாண்டன் பிள்ளையார் கோவில், ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இன்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை, 7.30 மணிக்கு நவக்கிரக பூஜை, 8 மணிக்கு கஜ பூஜை, 9 மணிக்கு முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வருதல், 10 மணிக்கு ஜலாதிவாசம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜை போன்றவை நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சுதர்சனஹோமம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை வேள்வி பூஜை, இரவு 10 மணிக்கு சைனாதி வாசம் ஆகியவையும்,

    24-ந் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் போன்றவையும் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி காலை 6 மணிக்கு ஈஸ்வர பூதத்தான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்படுதல், 9 மணிக்கு முத்தாரம்மன் மூலஸ்தானம், பரிவாரமூர்த்திகள் விமானம் கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தானம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் சச்சுதானந்தன், துணை தலைவர் மது.மோகன், செயலாளர் ராமநாதன், இணை செயலாளர் வி.சுப்பிரமணியன், பொருளாளர் குமார், இணை பொருளாளர் அருண் பிரசாத், ஆலோசகர் கோலப்பன், கோவில் கட்டுமான பொறியாளரும், ஆலோசகருமான எச்.சரவணசுப்பையா மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×