என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் இன்று தொடங்குகிறது
By
மாலை மலர்21 Dec 2020 5:32 AM GMT (Updated: 21 Dec 2020 5:32 AM GMT)

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம், திருவெண்பா உற்சவம் ஆகிய திருவிழாக்கள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 29-ந் தேதி ஆருத்ரா தரினம் நடைபெறும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம், திருவெண்பா உற்சவம் ஆகிய திருவிழாக்கள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் விழாக்கள் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29ந் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறும். இதையொட்டி தினமும் மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு, தீபாராதனை பூஜைகள் முடிந்து ஆடி வீதிகளில் சுவாமிஅம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
28-ந் தேதி (திங்கட்கிழமை) “கோ” ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி, ஆடி வீதிகளில் வீதி உலா நடைபெறும் 30-ந் தேதி (புதன்கிழமை ) திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி, ரிஷப வாகனத் திலும், அம்மன் மர சிம்மா சனத்திலும் ஆடி வீதிகளில் எழுந்தருளுவார்கள்.
நாளை (21-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை திருவெண்பா உற்சவம் நடைபெறும்.
இந்த 10 நாட்களிலும், 100 கால் மண்டபத்தில் நடராஜர் சன்னதி முன்புள்ள சவுக்கை யில் மாணிக்க வாசகர் சுவாமிகள் எழுந்தருளுவார். அங்கு தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாராதனை பூஜை கள் நடைபெறும்.
நடராஜருக்கு உகந்த மார்கழி திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும். நடப்பாண்டில் வருகிற 29-ந் தேதி நள்ளிரவு முதல் 30-ந் தேதி அதிகாலை வரை ஆருத்ரா தரிசனத்தின் பிரதான அபிஷேகம் நடை பெறும்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய 5 உற்சவர் திருமேனிகள் உள்ளன. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தின சபை, தாமிர சபை, சித்திரை சபை என பஞ்ச சபைக்கும் தனித்தனியாக உற்சவ திருமேனிகள் உள்ளன.
ஆருத்ரா தரிசனத்தை யொட்டி வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரது உற்சவ திருமேனிகள், சுவாமி சன்னதி 6 கால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர் , சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்திலும் எழுந் தருளுவார்கள்.
இரு இடங்களிலும் ஏக காலத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின்னர் கால பூஜைகள் முடிந்து பஞ்ச சபை உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் ஆடி வீதிகளில் உலா வருவார்கள்.
இதையொட்டி பக்தர்கள் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, எண்ணெய் ஆகிய வற்றை வருகிற 29-ந் தேதி மாலை 7 மணிக்குள் கோவில் உள் துறை அலுவலகத்தில் வழங்கலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்த விழாக்களுக்கான ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story
×