என் மலர்

  ஆன்மிகம்

  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
  X

  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சித்திரை மாத அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

  இந்நிலையில் வருகிற 2-ந் தேதி பிரதோஷமும், 4-ந் தேதி அமாவாசையும் வருவதை முன்னிட்டு 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடை விடுமுறையால், 4 நாட்களுக்கு பக்தர்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால், தாணிப்பாறையில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் குடிக்க தண்ணீர் இல்லை. இதனால் கோவிலுக்கு குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

  இந்தநிலையில் கோவில் பகுதியில் குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×