search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோடைக்காலத்தை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு  60 நாட்கள் சிறப்பு வழிபாடு
    X

    கோடைக்காலத்தை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு 60 நாட்கள் சிறப்பு வழிபாடு

    கோடைக்காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த வழிபாடு 60 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடைக்காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பானகாரம் படைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடு மொத்தம் 60 நாட்கள் நடைபெறும்.

    இதையொட்டி தினமும் மாலை 4 மணிக்கு நடை திறந்ததும், எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலக்காய், சுக்கு, புளி போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும். பின்னர், அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த பானகாரம் அருந்தினால், வெப்பம் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், இந்த பிரசாதத்தை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பானகாரம் வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 60 நாட்கள் இந்த வழிபாடு நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.

    Next Story
    ×