search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பேரூர் அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா 6-ந்தேதி நடக்கிறது
    X

    பேரூர் அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா 6-ந்தேதி நடக்கிறது

    கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலுடன் இணைந்த அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
    கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலுடன் இணைந்த அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா வருகிற 2-ந் தேதி இரவு 7 மணிக்கு துவஜா ரோகணம் கொடிகட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து 3-ந் தேதி மாலை 3 மணிக்கு முகப்பள்ளயம் மகேஸ்வர பூஜை, சிறப்பு அபிஷேகம், 4-ந் தேதி மதியம் 1 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு மகாசிவராத்திரி, திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், 5-ந் தேதி காலை 8 மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம், 10.30 மணிக்கு குண்டம் தோண்டுதல் பூஜை, மதியம் அன்னதானம், இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, நள்ளிரவு 1.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பலர் குண்டம் இறங்குகின்றனர். பின்னர் 11.55 மணியளவில் கொடி இறக்குதல், அக்னி அபிஷேகம், மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, பேச்சியம்மன், வீரபத்திரருக்கு அபிஷேகம், பாவை சுற்றுதல் ஆகியவை நடக்கின்றன. 10-ந் தேதி இரவு மறுபூஜை, குண்டம் அபிஷேகம், அங்காளம்மனுக்கு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×