என் மலர்
ஆன்மிகம்

X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
By
மாலை மலர்12 Dec 2018 2:48 PM IST (Updated: 12 Dec 2018 2:48 PM IST)

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரமோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.
8-வது நாளான நேற்றிரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று காலை கோவில் அருகேயுள்ள பஞ்சமி தீர்த்த தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
இதற்காக திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியை கான நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.
கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற சம்பவங்கள் தடுக்கவும் திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 டி.எஸ்.பி.க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story
×
X