search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரத்யங்கிரா தேவி கோவிலில் நாளை நிகும்பலா மகாயாகம்
    X

    பிரத்யங்கிரா தேவி கோவிலில் நாளை நிகும்பலா மகாயாகம்

    திருவிசநல்லூரில் உள்ள சிவகாம சுந்தரி அம்பிகா சமதே சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரத்யங்கிராதேவி சன்னதியில் நாளை நிகும்பலா யாகம் நடக்கிறது.
    திருவிசநல்லூரில் உள்ள சிவகாம சுந்தரி அம்பிகா சமதே சிதம்பரேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக மகாமங்கல பிரத்யங்கிராதேவி சன்னதி உள்ளது. இங்கு பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி 9 அடி உயரத்தில் 5 முகத்துடன் அருள்பாலிக்கிறார்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று நிகும்பலா மகாயாகம் நடைபெறுவது வழக்கம். நாளை(வெள்ளிக்கிழமை) ஆனி அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நிகும்பலாயாகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறுகிறது.

    மேலும் ஏகதின லட்சார்ச்சனை பெருவிழாவும் நடக்கிறது. லட்சார்ச்சனையில் பங்கு பெறும் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட வெள்ளிடாலர் வழங்கப்படுகிறது. நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. லட்சார்ச்சனை மற்றும் நிகும்பலா யாக பூஜைகளை கோவில் அர்ச்சகர் கணேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்துள்ளனர்.

    இந்த நிகும்பலா யாகத்தில் பங்கேற்றால் எதிரிகள் தொல்லை, பில்லி, சூனியம், கண்திருஷ்டி, போட்டி, பொறாமை, ஜாதக தோ‌ஷங்கள், கிரக தோ‌ஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர்.

    Next Story
    ×