search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமான்
    X
    சிவபெருமான்

    திருமந்திர பாடலும் விளக்கமும்

    திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார பாடலும், விளக்கமும்..
    அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்ற, திருமூலர் என்னும் சித்தர் பெருமான் எழுதிய பாடல்களின் தொகுப்பே ‘திருமந்திரம்.’ சிவபெருமானைப் பற்றியும், அன்பு நிறைந்த அவரது குணத்தைப் பற்றியும் பல பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளார், திருமூலர். திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார பாடலும், விளக்கமும்..

    பாடல்:-

    ஆனைந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்

    தான் அந்தமில்லாத் தலைவன் அருளது

    தேன் உந்து மாமலர் உள்ளே தெளிந்த தோர்

    பார் ஐங்குணமும் படைத்து நின்றானே.

    விளக்கம்:-

    தேவர்கள் கூட்டம் சிவபெருமானை பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வர். இப்படி அவர்களை வழிபாட்டில் இணைந்தது, எல்லையில்லாத இறைவனின் அருளே ஆகும். தேன் நிறைந்த மலர்போல, சிவபெருமானின் அருள் செறிந்ததால், தெளிந்த மனதில் சிவபெருமான் ஐம்பூதத்தின் குணங்களோடு வந்து பொருந்துவார்.
    Next Story
    ×