என் மலர்

    ஆன்மிகம்

    வீட்டில் பூஜை
    X
    வீட்டில் பூஜை

    கிரக பாதிப்புகள் விலக தினமும் படிக்க வேண்டிய ஸ்லோகம்…

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கிரக பாதிப்புகளும் விலகி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும். துன்பங்கள் படிப்படியாக குறையும்.
    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
    சனிபாம்பி ரண்டு முடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே.
    நவகிரக ஸ்லோகம்
    ஆரோக்யம் பிரததாது நோ தினகர;
    சந்த்ரோ யசோ நிர்மலம்
    பூதிம் பூமிசுதோ சுதாம்சு தநயஹ
    பிரக்னம் குரு; கௌரவம்
    காவ்ய கோமள வாக் விலாஸம் அதுலம்
    மந்தோ முதம் சர்வதா
    ராஹீர் பாஹிபலம் விரோத சமனம்
    கேது; குலஸ் யோனதிம்.

    கருத்து: ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் அருளும்படி சூரியனையும், மதிப்பும் மென்மையும் பெற சந்திரனையும், வளமும் செல்வம் அருளும்படி செவ்வாயையும், புத்திக்கூர்மையையும் சுறுசுறுப்பையையும் தரும்படி புதனையும், ஞானத்தையும் நடுநிலைமையும் அருளும்படி குருபகவானையும், வசீகரம் மற்றும் முன்னேற்றம் தரும்படி சுக்கிரனையும், ஒற்றுமையையும் நிம்மதியையும் அருளும்படி சனியையும், வலிமை, வீரம், வீரியம் அருளும்படி ராகுவையும், குழந்தைச் செல்வமும் உற்றார் உறவினருடன் இணைந்து நல் வாழ்வு வாழ அருளும்படி கேதுவையும் வணங்கி வரம்பெறுவோம்.
    Next Story
    ×