search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வராஹி
    X
    வராஹி

    நோய்கள், கடன்கள் தீர வராஹி ஸ்லோகம்

    இந்த மகத்தான துதியை தினமும் துதித்தால் நோய்கள் நீங்கும், கடன்கள் தீரும். வராகமூர்த்தியின் திருவருள் கிட்டும்.
    ஊர்த்வ ப்ரஸாரி பரிதூம்ர விதூதரோமா
    ப்ரோக்ஷிப்த வாலதி: அவாங்க்முக கோர கோண:
    தூர்ண ப்ரதீர்ண ஜலத: பரிகூர்ண தக்ஷ்ணா
    ஸ்தோத்ரூந் முநீந் சிசிரயந் அவதேரித த்வம்

    - நாராயணீயம் தசகம் 12(7)

    பொதுப்பொருள்: குருவாயூரப்பா! நீ வராக அவதாரம் எடுத்தபோது உன் திருவுருவம் எப்படி இருந்தது தெரியுமா? உனது ரோமங்கள் மேல் நோக்கியும் கருப்பும் சிவப்பும்  வண்ணம் கொண்டு அசைந்தன. உனது வால் உயரமாகத் தூக்கியிருந்தது. உனது மூக்கு கீழ் நோக்கியபடி பயங்கரமாக இருந்தது. மேகக்கூட்டத்தை நீ பிளந்தாய், உன்னை  துதித்துக் கொண்டிருந்த முனிவர்களுக்கு உன் திருக்கண்களால் ஆசி வழங்கிக் கொண்டே பூமியை மீட்க கடலினுள் இறங்கினாய் அல்லவா? அத்தகைய பராக்கிரமம்  கொண்ட நீ எனது துயரை எல்லாம் தீர்த்து வைப்பாயாக. (இத்துதியை நாராயணபட்டத்திரி பாடியபோது அந்த வராகமூர்த்தியின் தோற்றத்தை குருவாயூரப்பன் அவருக்கு காட்டியருளியதாக நம்பிக்கை.

    Next Story
    ×