என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அஷ்டலட்சுமிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் அனைத்தையும் பெறலாம்.
    முதலில் மஹாலட்சுமியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை தியானம் செய்யவும்.

    ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
    வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
    அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
    தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
    மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
    சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
    ஸத்யர்த்தே ஜபே விநியோக:
    ஆலயங்களில் நவக்கிரக சன்னிதியில் இருக்கும் சுக்ரனை வழிபடும் போது சுக்ர காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது நற்பலனை வழங்கும்.
    அசுரர்களின் குருவாக விளங்குபவர் சுக்ரன். சிவபெருமானை தியானித்து அழியாத உடலையும், வற்றாத செல்வத்தையும் பெற்றவர். இவர் வெண்ணிற திருமேனியைக் கொண்டவர். சிவனது அருளைப் பெற்று, நவக்கிரகங்களில் ஒருவரானார். ஒரு முறை சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானார் சுக்ரன். அப்போது ஈசனின் கோபத்தை தணித்து சுக்ரனைக் காப்பாற்றினாள் அம்பிகை.

    இதனால் வெள்ளிக்கிழமையில் அம்பாளை வழிபாடு செய்தால், சுக்ரனின் அருளையும் பெறலாம். வெண் சந்தனம், வெண் மலர், வெண்மணி மாலை, வெள்ளாடை, வெண்குடை, வெண்ணிறக் கொடி ஆகியவற்றைக் கொண்டவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்பாலிப்பார். சுக்ரனுக்கு, காவியன், ஹிமாபன், குற்றமற்றவன், பார்க்கவன், சுக்லாம்பரதரன், சுக்லபூஷணன், சூரி, ஆத்மசித், வேதவதோங்க பாரகன், மகாமதி, நீதிமார்க்க காமி, கிராகாதீபன், பிரபு, கருணாசிந்து, தைத்ய குரு உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.

    மிருத சஞ்சீவினி மந்திரத்தால், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி படைத்தவர் சுக்ரன். அவர் அறிவில் சிறந்த பண்டிதராகவும், சகல சாஸ்திரங்களிலும் கரைகண்டவராகவும் திகழ்பவர். மொச்சைப் பயிறு தானம் கொடுத்து இவரது அருளைப் பெறலாம்.



    வாமன அவதாரம் எடுத்த திருமால், மூன்றடி மண் கேட்டு மகாபலியிடம் வந்தார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த சுக்ரன், மகாபலியை தானம் கொடுக்க விடாமல் தடுத்தார். மன்னனோ கேட்கவில்லை. உடனே சுக்ரன் வண்டு உருவம் கொண்டு தண்ணீர் வரும் கெண்டியின் துவாரத்தை அடைத்தார். வாமனரோ ஒரு தர்ப்பைப் புல் கொண்டு துவாரத்தைக் குத்தினார். அதில் சுக்ரனின் ஒரு கண் பார்வை இழந்துவிட்டது. இதையடுத்து சுக்ரன், திருமயிலையில் உள்ள சிவலிங்கத்தைப் பூஜித்து கண் பார்வையை திரும்பப் பெற்றார். சுக்ரன் வழிபட்டதால் இத்தல இறைவன் ‘வெள்ளஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

    ஆலயங்களில் நவக்கிரக சன்னிதியில் இருக்கும் சுக்ரனை வழிபடும் போது சுக்ர காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது நற்பலனை வழங்கும்.

    சுக்ர காயத்ரி மந்திரம்

    ‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே
    தநு ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சுக்ரஹ் ப்ரசோதயாத்’

    குதிரைக் கொடியைக் கொண்ட சுக்ர தேவனை அறிந்து கொள்வோம். வில்லைக் கையில் ஏந்தி நிற்கும் அவர் மீது தியானம் செய்வோம். சுக்ர பகவானான அவர் நம்மை காத்து அருள்செய்வார் என்பது இதன் பொருள்.

    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கலைகளில் சிறந்து விளங்கலாம். விருப்பங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உண்டாகும். வெற்றி தேடி வரும். நீண்ட ஆயுள் கிடைக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லறம் இனிமையாக மாறும். வியாபாரம் செழித்து வளரும். வித்தைகள் மூலம் உலகப் புகழ் பெறலாம். வசதிகள் பெருகும்.
    இந்தத்துதியை அன்றாடம் சொல்பவர்களுக்கு ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் நீங்கும். குறைந்த பட்சம் சிவராத்திரி அன்றாவது இத்துதியை அவசியம் பாராயணம் செய்ய வேண்டும்.
    சிவராத்திரி அன்று காலையில் எழுந்து நீராடி, தூய்மையான உடைகளை உடுத்திக் கொண்டு நெற்றியிலே நீறு துலங்க. சிவபெருமானை தியானித்து பூஜை செய்ய வேண்டும். அன்று உபவாசம் இருக்க வேண்டும்.

    பால், தயிர், நெய், தேன் இவற்றினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு நறுமண மலர்களாலும். வில்வ இலைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    பின்னர் தூப தீப நைவேத்யங்கள் செய்து, ‘நமசிவாய என்ற ஐந்தெழுத்தை இயன்ற வரை ஜபிக்க வேண்டும். அன்றைய இரவை உறங்காது கழிப்பது பெரும் புண்ணியமாகும்.

    சிவபெருமானின் திருப்பாதத்திலே ‘ந’ என்ற எழுத்தும்.திருவுந்திக் கமலத்திலே ‘ம’என்ற எழுத்தும். திருத்தோள்கள் இரண்டிலும் ‘சி’ என்ற எழுத்தும். திருவதனத்திலே ‘வா’ என்ற அட்சரமும். கடை முடியிலே ‘ய’ என்ற எழுத்தும் உள்ளன என்பர். சிவபெருமானின் திருத் தோற்றமே ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமாகக் காட்சி தருகின்றது.



    சிவராத்திரியன்று அவசியம் சொல்ல வேண்டிய துதி

    ஸெளராஷ்ட்ரே சோமநாதம் ச
    ஸ்ரீசைலே மல்லிகார்ஜூனம்
    உஜ்ஜயின்யாம் மஹாகாலம்
    ஓம்காரம் அமலேச்வரம்

    பரல்யாம் வைத்ய நாதம் ச
    டாகின்யாம் பீம சங்கரம்
    சேது பந்தேது ராமேசம்
    நாகேசம் தாருகாவனே
    வாரணஸ்யாம் து விச்வேசம்
    திரியம்பகம் கௌதமீதடே
    ஹிமாலயேது கேதாரம்
    குச்மேசம் ச சிவாலயே’

    பாரதத் திருநாட்டில் பன்னிரு ஜோதி லிங்கத் தலங்கள் உள்ளன. சோமநாதர், மல்லிகார்ஜூனேசுவரர், மஹா காலேசுவரர், ஓம்காரேசுவரர் வைத்யநாதர், பீமசங்கரர், ராமேசுவரர், நாகேசுவரர், விஸ்வநாதர், திரியம்பகேசுவரர், கேதாரேசுவரர், குஷ்மேசர் ஆகியன இந்தப்பன்னிரு ஜோதி லிங்கங்களின் திருநாமங்களாகும்.

    இந்த துதியை அன்றாடம் சொல்பவர்களுக்கு ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் நீங்கும். குறைந்த பட்சம் சிவராத்திரி அன்றாவது இத் துதியை அவசியம் பாராயணம் செய்ய வேண்டும்.
    சிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும்.
    சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும்.

    அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
    குணைகஸிந்தவே நம சிவாய
    தாமலேச தூதலோக
    பந்தவே நம சிவாயநாம
    சோஷிதா நமத்
    பவாந்தவே நம சிவாய
    பாமரேதர ப்ரதாத
    பாந்தவே நம சிவாய

    பொதுப் பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.
    சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
    சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
    சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
    சிவ சிவ என்னச் சிவகதி தானே

    என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.
    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. காமாட்சி அம்மனுக்கு உகந்த ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    மாங்காட்டில் வாழ்பவளே     காமாட்சி!
    மகிமையுள்ள தெய்வம் நீயே     காமாட்சி!
    பஞ்சாக்நி மத்தியிலே     காமாட்சி!
    பரமனுக்குத் தவமிருந்த     காமாட்சி!
    காஞ்சியிலே கோயில்கொண்ட     காமாட்சி!
    கல்யாணக் கோலம்பூண்டாய்     காமாட்சி!
    சங்கரரும் பூஜை செய்த     காமாட்சி!
    சக்கரத்தில் உறைந்திட்ட     காமாட்சி!
    அர்த்தமேரு அலங்கரிக்கும்     காமாட்சி!
    அண்டி னோரைக் காக்கின்ற     காமாட்சி!
    காஞ்சிமுனி சேவிக்கும்     காமாட்சி!
    கண்கண்ட தெய்வமம்மா     காமாட்சி!
    பஞ்சலோக வடிவினியே     காமாட்சி!
    பக்தர் துயர் தீர்த்திடுவாய்     காமாட்சி!
    ஆடிப்பூர தினத்தினிலே     காமாட்சி!
    ஆனந்தமாய் வீற்றிருப்பாய்     காமாட்சி!
    பங்குனிநல் உத்திரத்தில்     காமாட்சி!
    பரமனைநீ மணங்கொண்டாய்     காமாட்சி!
    கரும்போடு காட்சிதரும்     காமாட்சி!
    கருணையுள்ள தெய்வம் நீயே     காமாட்சி!
    கிளியோடு காட்சிதரும்     காமாட்சி!
    கிருபைநீயும் செய்திடுவாய்     காமாட்சி!
    சாந்தமாக காட்சி தரும்     காமாட்சி!
    சந்தானம் தந்திடுவாய்     காமாட்சி!
    சூதவனம் கோவில் கொண்ட     காமாட்சி!
    சூதுகளை அகற்றிடுவாய்     காமாட்சி!
    இடப்புறத்தில் அமர்ந்திட்ட     காமாட்சி!
    இன்பமெல்லாம் தந்திடுவாய்     காமாட்சி!


    ஆறுவாரப் பூஜை ஏற்பாய்     காமாட்சி!
    ஆதிகாமாட்சியும் நீயே     காமாட்சி!
    முதல்வாரப் பூஜையிலே     காமாட்சி!
    நம்குறைகள் அறிந்திடுவாள்     காமாட்சி!
    இரண்டாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!
    இன்னல்களைப் போக்கிடுவாள்     காமாட்சி!
    மூன்றாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!
    மூன்றுவரம் தந்திடுவாள்     காமாட்சி!
    நான்காம் வாரப் பூஜையிலே     காமாட்சி!
    நலன்கள்பல தந்திடுவாள்     காமாட்சி!
    ஐந்தாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!
    ஐயங்களைப் போக்கிடுவாள்     காமாட்சி!
    ஆறாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!
    நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள்     காமாட்சி!
    மாவடியில் வசித்தவளே     காமாட்சி!
    மனக்குறைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி!
    தாம்பூலம் ஏற்றிடுவாள்     காமாட்சி!
    தாயாகக் காத்திடுவாள்     காமாட்சி!
    கற்பூரம் ஏற்றிடுவேன்     காமாட்சி!
    கலிதெய்வம் நீதானே     காமாட்சி!
    புஷ்பமாலை ஏற்றிடுவாள்     காமாட்சி!
    புண்ணியங்கள் தந்திடுவாள்     காமாட்சி!
    காய்ச்சிட்ட பாலுடனே     காமாட்சி!
    கற்கண்டும் ஏற்றிடுவாள்     காமாட்சி!
    ஏலக்காய் தேனுடனே     காமாட்சி!
    ஏழைகளின் துயர் தீர்ப்பாய்     காமாட்சி!
    எலுமிச்சம் பழம் ஏற்பாள்     காமாட்சி!
    எம்குறைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி!
    மாலையாக காட்சிதரும்     காமாட்சி!
    பாசமுடன் காத்திடுவாள்     காமாட்சி!
    மங்களமாய் காட்சி தரும்     காமாட்சி!
    மங்களமாய் வாழவைப்பாள்     காமாட்சி!
    உத்யோகம் தந்திடுவாள்     காமாட்சி!
    உன்னடியே சரணமம்மா     காமாட்சி!
    அன்னை உனை வேண்டி நின்றேன்     காமாட்சி!
    ஆதரிப்பாய் என்னையும் நீ     காமாட்சி!
    மாங்கல்யம் தந்திடுவாள்     காமாட்சி!
    மக்களையும் காத்திடுவாள்     காமாட்சி!
    மணாளனைத் தந்திடுவாள்     காமாட்சி!
    மழலைகளும் தந்திடுவாள்     காமாட்சி!
    தூளிகளை ஏற்றிடுவாள்     காமாட்சி!
    துன்பங்களைத் துடைத்திடுவாள்     காமாட்சி!
    வெற்றிகளைத் தந்திடுவாள்     காமாட்சி!
    வேதனைகள் போக்கிடுவாள்     காமாட்சி!
    வேழமுகம் நாயகன் தாய்     காமாட்சி!
    வேல்முருகன் அன்னையும் நீ     காமாட்சி!
    குருநாதர் காட்டிட்ட     காமாட்சி!
    குவலயத்தோர் கொண்டாடும்     காமாட்சி!
    அகிலாண்ட நாயகியே     காமாட்சி!
    அன்பர்குறை தீர்த்திடுவாள்     காமாட்சி!
    ஆவின்பால் குடித்தவளே     காமாட்சி!
    ஆனந்தம் தந்திடுவாள்     காமாட்சி!
    சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்     காமாட்சி!
    சீக்கிரமே அருள்தருவாய்     காமாட்சி!
    கெஞ்சுகிறேன் உன்னையம்மா     காமாட்சி!
    கீர்த்தியுடன் வாழவைப்பாய்     காமாட்சி!
    கரம்கூப்பி வணங்குகிறேன்     காமாட்சி!
    வரம் அனைத்தும் தந்திடுவாய்     காமாட்சி!
    நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள்     காமாட்சி!
    நீதிகளைத் தந்திடுவாள்     காமாட்சி!
    வறுமைகளை ஓட்டிடுவாள்     காமாட்சி!
    வாழ்வுதந்து காத்திடுவாள்     காமாட்சி!
    அர்ச்சனைகள் ஏற்றிடுவாள்     காமாட்சி!
    அகத்தினிலே குடியிருப்பாள்     காமாட்சி!
    குழந்தை நானும் மனம் மகிழ     காமாட்சி!
    குமரனுடன் காட்சி தாராய்     காமாட்சி!
    அன்னை தந்தை தெய்வம் நீயே     காமாட்சி!
    அருள்வடிவாம் குருநீயே     காமாட்சி!
    மடிசாரில் காட்சிதரும்     காமாட்சி!
    மனவினைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி!
    கடும்தபசு புரிந்திட்ட     காமாட்சி!
    கவலைகளைக் களைந்திடுவாள்     காமாட்சி!
    காமகோடி ஈஸ்வரியே     காமாட்சி!
    காத்திருந்து வரமளிப்பாய்     காமாட்சி!
    காஞ்சிமுனி வேண்டிநிற்கும்     காமாட்சி!
    காலமெல்லாம் காத்தருள்வாய்     காமாட்சி!
    நல்ல புருஷன் வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி பூஜை செய்து வந்தால் நிச்சம் நடக்கும் என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் கூறுகிறார்கள்.
    விரைவில் திருமணம் நடக்க பெண்கள் கடைபிடித்து செய்யத்தக்க பலன் தரும் பூஜை விபரம் கீழ்வருமாறு,

    கௌரி பூஜை

    திருமணம் ஆக வேண்டிய பெண்கள் குத்து விளக்கில் செய்ய வேண்டிய பூஜை இது. 12 நாட்கள், 24 நாட்கள், 45 நாட்கள் இவற்றில் ஒன்றை கடைப்பிடித்து செய்ய நல்ல புருஷனை அடைந்து சந்தோஷம் பெறுவாள்.

    ஆசமனம்

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனத் த்யோயத் ஸர்வ விக்னோப சாந்தயே
    (அட்சதையை கையில் எடுத்துக் கொள்ளவும்)
    மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரித்யர்த்தம் சீக்கிரமே விவாஹ ஸித்தியர்த்தம் ஸ்ரீகௌரி பூஜாம் கரிஷ்யே!
    (பாத்திரத்தில் உள்ள இரு கைகளையும் சுத்தப்படுத்திக் கொள்ளவும்)

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
    ஸர்வார்த்த ஸாதகே
    ஸரண்யே த்ரயம்பகே கௌரி
    நாராயணி நமோஸ்துதே!!

    அஸ்மின் தீபே ஸ்ரீகௌரிம் த்யாயாமி
    ஆவாஹயாமி
    ஆஸமனம் ஸமர்ப்பயாமி
    அர்கயம ஸமர்ப்பயாமி
    ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
    ஸ்நானம் ஸமர்ப்பயாமி
    ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
    வஸ்தர யக்ஞோபவீத
    உத்தரீய ஆபரணார்தே இமே அஷதா:
    கந்தான் தாரயாமி, கந்தஸ்யோபரி
    ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
    அஷதான் ஸமர்ப்பயாமி
    (அர்ச்சனை செய்யவும்)
    அம்பிகாயை நமஹ
    உமாயை நமஹ
    பார்வத்யை நமஹ
    கௌர்யை நமஹ
    ராஜ ராஜேச்வர்யை நமஹ
    ராஜ்ய தாயின்யை நமஹ
    ராஜ க்ருபாயை நமஹ
    சிவ&பிரியை நமஹ
    ஸ்ரீகௌர்யை நமஹ
    நாநாவித மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
    தூபார்த்தம் தீபார்த்தம் ச அஷதன் ஸமர்ப்பயாமி
    (நிவேதனம் செய்யவும்)
    கற்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே
    ஸரண்யே த்ரயம்பகே கௌரி தேவி நாராயணி
    நமோஸ்துதே
    இந்த ஸ்லோகத்தை ஒரு தடவை ஒரு நமஸ்காரம் விதம் ஏழு தடவை சொல்லி ஒரு நமஸ்காரம் செய்து பிரார்த்திக்கவும்.

    அஸ்மாத் தீபாத் கௌரி யதாஸ்தானம்

    ப்ரதிஷ்டடாபயாமி என்று சொல்லி புஷ்பத்தை தீபத்தில் பாதத்தில் போட்டு தீபத்தை வடக்கே நகர்த்தவும்.
    அர்ச்சித்த பூக்களை கண்களில் ஒற்றிக் கொண்டு தலையில் வைத்துக் கொள்ளவும்.
    வசதியுள்ளவர்கள் தினமும் ஒரு குருவின் மூலம் இந்தப் பூஜையை செய்வித்து அவர்களுக்கு பல தானங்களை தரலாம்.
    (இந்த பூஜை ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே நல்ல புருஷன் அடைவார்கள் என்பது அனுபவப் பூர்வமாகக் கண்ட உண்மை என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் கூறுகிறார்கள்)
    தோஷம், குடும்ப பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயரின் தியான ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். இந்த ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் ஆரோகதா |
    அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

    ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
    அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

    அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ'கநாசனம் |
    கபீச'மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

    ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
    பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

    யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
    பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

    மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
    வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி'ரஸா நமாமி ||

    அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
    ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

    உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |
    கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

    ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |
    அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

    ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
    அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||

    நாமாம்யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |
    ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||
    ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் கிரகத்தை வழிபடும் போது, அதற்காக காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
    நவக்கிரகங்களில் மூன்றாவது கிரகம் செவ்வாய். இந்த கிரகத்திற்கு அங்காரகன், சக்திதரன், குமரன், மகாகாயன், மங்கலன், தனப்ரதன் உள்பட பல பெயர்கள் உள்ளன. அங்காரகம் என்றால் நெருப்பு என்று பொருள். இந்த கிரகத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் ஏழு கதிர்களைக் கொண்டதாக உள்ளது.

    செவ்வாய்க்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை உஷ்ணம், அக்ருமுகம், வியாலம், துதிரானம், நிஸ்தரிசனம் ஆகியவையாகும். முக் கோண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், ரத்தத்திற்குக் காரகன். உயர்ந்த சக்தியை கையில் வைத்துக் கொண்டு மங்கலத்தைச் செய்பவன்.

    செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சாரம் செய்கிறது. செவ்வாய் கிரகத்தின் உலோகம் தாமிரமாகும். தேசத்தைப் பரிபாலனம் செய்வோருக்கும், தன்மானத்துடன் வாழ்வோருக்கும், நால்வகைப் படைகளை முன்னின்று இயக்குவோருக்கும் மூல பலமாக விளங்குவது இந்த செவ்வாய்க்கிரகம்தான். ஆண், பெண் ஜாதகங்களில் செவ்வாய், ஜென்ம லக்னத்தில் இருந்தாலோ, சந்திர லக்னத்தில் இருந்தாலோ, சுக்ரன் இருக்கும் இடத்தில் இருந்தாலோ, இரண்டாம் இடத்தில் இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் என்று பொருள்.

    ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் கிரகத்தை வழிபடும் போது, அதற்காக காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

    செவ்வாய் காயத்ரி மந்திரம் :

    ‘ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’

    வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் தேவனை அறிந்துகொள்வோம். தடைகளை அகற்றும் கரங்கள் கொண்ட அவனை நோக்கி தியானம் செய்வோம். பலம் பொருந்திய அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து, அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் மங்கலம் உண்டாகும். உள்ளம் தூய்மை பெறும். உடல் உறுதியாகும். மனம் திடமாகும். வீரம் அதிகரிக்கும். தொண்டு மனப்பான்மை வந்து சேரும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். பகை விலகும்.
    ஷீரடி சாய்பாபாவின் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு வாய்ந்த மந்திரங்களை பார்க்கலாம். இந்த மந்திரங்களை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வரலாம்.
    ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி :

    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய  தீமஹி
    தந்நோ சாய்  ப்ரசோதயாத்

    ஷீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம் :

    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி :

    ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் :

    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
     
    சாயிநாதர் திருவடி :

    ஸாயி நாதர் திருவடியே
    ஸம்பத் தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்த தளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வை யளிக்கும் திருவடியே

    ஓம் சாய் ராம்
    விநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்த சிறப்பு ஸ்லோகங்களை வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம்.
    கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்த சிறப்பு ஸ்லோகங்களை வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம்.

    ஸ்லோகம் 1 :

    சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
    ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

    ஸ்லோகம் 2 :

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    ஸ்லோகம் 3 :

    ஓம் ஏகதந்தாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    ஸ்லோகம் 4 :

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

    ஸ்லோகம் 5 :

    மூஷிக வாகன மோதக ஹஸ்த
    சாமர கர்ண விளம்பித சூத்ர
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர
    விக்ன விநாயக பாத நமஸ்தே.

    ஸ்லோகம் 6 :

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
    கணபதி என்றிடக் கவலை தீருமே.

    ஸ்லோகம் 7  :

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
    பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

    ஸ்லோகம் 8 :

    அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம்
    நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
    மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

    ஸ்லோகம் 9 :

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
    உமாஸுதம் சோக விநாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

    ஸ்லோகம் 10 :

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றும் தா.

    ஸ்லோகம் 11 :

    விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
    விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
    விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
    தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

    ஸ்லோகம் 12 :

    வக்ரதுண்டாய ஹீம்
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

    அனைத்து விதமான தோஷங்களையும் போக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் மந்திரம் ஒன்று உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பலன் பெறுங்கள்.
    ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
    ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
    ந்ருஸம்ஹம் பீஷணம் பத்ரம்
    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

    - தினமும் 27 முறை பாராயணம் செய்ய சுபம் உண்டாகும்.
    ×