என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ரெங்கநாதருக்கு உகந்த இந்த ஸ்தியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெறலாம்.
    ரெங்கநாதருக்கு உகந்த இந்த ஸ்தியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெறலாம்.

    ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜ முகுலோத்பாஸமாநே விமாநே
    காவேரீ மத்யதேசே பணிபதிசயநே சேஷபர்யங்க பாகே
    நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர: பார்ச்வ விந்யஸ்த ஹஸ்தம்
    பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்
    திருமணம் தடைப்படுபவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமையில் சொல்லி வந்தால் தடைகள் விலகும்.
    ஓம் ஷண்முக பதயே நமோ நம
    (ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷண்மத பதயே நமோ நம
    (ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
    (ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம
    (ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்கோண பதயே நமோ நம
    (ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்கோச பதயே நமோ நம
    (ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நவநிதி பதயே நமோ நம
    (ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சுபநிதி பதயே நமோ நம
    (ஓம் பேரின்பச் செல்வத்தின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நரபதி பதயே நமோ நம
    (ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சுரபதி பதயே நமோ நம
    (ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நடச்சிவ பதயே நமோ நம
    (ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
    (ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் )

    ஓம் கவிராஜ பதயே நமோ நம
    (ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் தபராஜ பதயே நமோ நம
    (ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் இகபர பதயே நமோ நம
    (ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் புகழ்முனி பதயே நமோ நம
    (ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஜயஜய பதயே நமோ நம
    (ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நயநய பதயே நமோ நம
    (ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மஞ்சுள பதயே நமோ நம
    (ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் குஞ்சரி பதயே நமோ நம
    (ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் வல்லீ பதயே நமோ நம
    (ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மல்ல பதயே நமோ நம
    (ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்)



    ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
    (ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
    (ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
    (ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் இஷ்டி பதயே நமோ நம
    (ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் அபேத பதயே நமோ நம
    (ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சுபோத பதயே நமோ நம
    (ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் வியூஹ பதயே நமோ நம
    (ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மயூர பதயே நமோ நம
    (ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்)

    ஓம் பூத பதயே நமோ நம
    (ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் வேத பதயே நமோ நம
    (ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் புராண பதயே நமோ நம
    (ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் பிராண பதயே நமோ நம
    (ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் பக்த பதயே நமோ நம
    (ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் முக்த பதயே நமோ நம
    (ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் அகார பதயே நமோ நம
    (ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் உகார பதயே நமோ நம
    (ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மகார பதயே நமோ நம
    (ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் விகாச பதயே நமோ நம
    (ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஆதி பதயே நமோ நம
    (ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் பூதி பதயே நமோ நம
    (ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் அமார பதயே நமோ நம
    (ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் குமார பதயே நமோ நம
    (ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்)
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாக்கு பலிதம் உண்டாகும். செல்வம் பெருகும். பகையை வெல்லும் சக்தியைப் பெறுவீர்கள்.
    ஆறுமுகப் பெருமானைப் போலவே ஆறுமுகங்களைக் கொண்டவள் குலசுந்தரி தேவி. இவள் சிவந்த நிறத்தை உடையவள். லட்சுமி தேவியைப் போல செந்தாமரை மலரில் வீற்றிருப்பவள். ஆறுமுகங்களைக் கொண்ட இந்த தேவியின் ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் இருக்கும். தலையில் சிவபெருமானைப் போல பிறை சந்திரனை அணிந்திருப்பாள் இந்த தேவி.

    பன்னிரண்டு கரங்களைக் கொண்ட இவளுக்கு, வலது கரங்களில் முறையே பவளமாலை, தாமரை, ரத்தினக் கமண்டலம், தனம் நிரப்பிய ரத்தினக் கிண்ணம், மாதுளம் பழம், ஞானமுத்திரை ஆகியவற்றையும், இடது கரங்களில் முறையே புத்தகம், செந்தாமரை, தங்க எழுத்தாணி, ரத்தின மாலை, சங்கு, வரத முத்திரை ஆகியவற்றையும் ஏந்தியிருக்கிறாள்.

    குலசுந்தரி தேவி காயத்ரி :

    ‘ஓம் குலசுந்தர்யை வித்மஹே
    காமேஸ்வர்யை தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்’

    ஸ்ரீகுலசுந்தரி தேவியை அறிந்து கொள்வோம். காமேஸ்வரி என்ற பெயர் கொண்ட அந்த தேவியின் மீது தியானம் செய்வோம். நித்யாதேவியான அவள், நம்மை காத்து அருள்புரிவாள் என்பது இந்த காயத்ரி மந்திரத்தின் பொருளாகும்.

    இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாக்கு பலிதம் உண்டாகும். செல்வம் பெருகும். பகையை வெல்லும் சக்தியைப் பெறுவீர்கள்.
    எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணக்கி, வழிபாடு செய்து விட்டு தான் தொடங்க வேண்டும். இந்த வகையில் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் வெற்றி நிச்சயம்.
    ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.
    ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.
    ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.
    ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப
    ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.
    ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.
    ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ
    ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ
    ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.


    ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.
    ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி
    ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி
    ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,
    ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !
    ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.
    ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.
    ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.
    ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.
    ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.
    ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.
    ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.
    ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல்
    ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் -
    ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல்
    ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல்
    வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள்.
    சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.

    ஓம் வாராஹி போற்றி
    ஓம் சக்தியே போற்றி
    ஓம் சத்தியமே போற்றி
    ஓம் ஸாகாமே போற்றி
    ஓம் புத்தியே போற்றி
    ஓம் வித்துருவமே போற்றி
    ஓம் சித்தாந்தி போற்றி
    ஓம் நாதாந்தி போற்றி
    ஓம் வேதாந்தி போற்றி
    ஓம் சின்மயா போற்றி
    ஓம் ஜெகஜோதி போற்றி
    ஓம் ஜெகஜனனி போற்றி
    ஓம் புஷ்பமே போற்றி
    ஓம் மதிவதனீ போற்றி
    ஓம் மனோநாசினி போற்றி
    ஓம் கலை ஞானமே போற்றி
    ஓம் சமத்துவமே போற்றி
    ஓம் சம்பத்கரிணி போற்றி
    ஓம் பனை நீக்கியே போற்றி
    ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
    ஓம் தேஜஸ் வினி போற்றி
    ஓம் காம நாசீனி போற்றி
    ஓம் யகா தேவி போற்றி
    ஓம் மோட்ச தேவி போற்றி
    ஓம் நானழிப்பாய் போற்றி
    ஓம் ஞானவாரினி போற்றி
    ஓம் தேனானாய் போற்றி
    ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
    ஓம் தேவ கானமே போற்றி
    ஓம் கோலாகலமே போற்றி
    ஓம் குதிரை வாகனீ போற்றி
    ஓம் பன்றி முகத்தாய் போற்றி
    ஓம் ஆதி வாராஹி போற்றி
    ஓம் அனாத இரட்சகி போற்றி
    ஓம் ஆதாரமாவாய் போற்றி
    ஓம் அகாரழித்தாய் போற்றி
    ஓம் தேவிக்குதவினாய் போற்றி
    ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
    ஓம் ஜுவாலாமுகி போற்றி
    ஓம் மாணிக்கவீணோ போற்றி
    ஓம் மரகதமணியே போற்றி
    ஓம் மாதங்கி போற்றி
    ஓம் சியாமளி போற்றி
    ஓம் வாக்வாராஹி போற்றி
    ஓம் ஞானக்கேணீ போற்றி
    ஓம் புஷ்ப பாணீ போற்றி
    ஓம் பஞ்சமியே போற்றி
    ஓம் தண்டினியே போற்றி
    ஓம் சிவாயளி போற்றி
    ஓம் சிவந்தரூபி போற்றி
    ஓம் மதனோற்சவமே போற்றி
    ஓம் ஆத்ம வித்யே போற்றி
    ஓம் சமயேஸ்ரபி போற்றி
    ஓம் சங்கீதவாணி போற்றி
    ஓம் குவளை நிறமே போற்றி
    ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
    ஓம் சர்வ ஜனனீ போற்றி
    ஓம் மிளாட்பு போற்றி
    ஓம் காமாட்சி போற்றி
    ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
    ஓம் முக்கால ஞானி போற்றி
    ஓம் சர்வ குணாதி போற்றி
    ஓம் ஆத்ம வயமே போற்றி
    ஓம் ஆனந்தானந்தமே போற்றி
    ஓம் நேயமே போற்றி
    ஓம் வேத ஞானமே போற்றி
    ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
    ஓம் அறிவளிப்பாய் போற்றி
    ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
    ஓம் கலையுள்ளமே போற்றி
    ஓம் ஆன்ம ஞானமே போற்றி
    ஓம் சாட்சியே போற்றி
    ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
    ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
    ஓம் மரணமழிப்பாய் போற்றி
    ஓம் ஹிருதய வாகீனி போற்றி
    ஓம் ஹிமாசல தேவி போற்றி
    ஓம் நாத நாமக்கிரியே போற்றி
    ஓம் உருகும் கோடியே போற்றி
    ஓம் உலுக்கும் மோகினி போற்றி
    ஓம் உயிரின் உயிரே போற்றி
    ஓம் உறவினூற்றே போற்றி
    ஓம் உலகமானாய் போற்றி
    ஓம் வித்யாதேவி போற்றி
    ஓம் சித்த வாகினீ போற்றி
    ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
    ஓம் இலயமாவாய் போற்றி
    ஓம் கல்யாணி போற்றி
    ஓம் பரஞ்சோதி போற்றி
    ஓம் பரப்பிரஹ்மி போற்றி
    ஓம் பிரகாச ஜோதி போற்றி
    ஓம் யுவன காந்தீ போற்றி
    ஓம் மௌன தவமே போற்றி
    ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
    ஓம் நவரத்ன மாளிகா போற்றி
    ஓம் துக்க நாசினீ போற்றி
    ஓம் குண்டலினீ போற்றி
    ஓம் குவலய மேனி போற்றி
    ஓம் வீணைஒலி யே போற்றி
    ஓம் வெற்றி முகமே போற்றி
    ஓம் சூதினையழிப்பாய் போற்றி
    ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
    ஓம் அண்ட பேரண்டமே போற்றி
    ஓம் சகல மறிவாய் போற்றி
    ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
    ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
    ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
    ஓம் வாராஹி பதமே போற்றி
    குடும்பத்தில் வறுமை நீங்கி செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.
    கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. இலங்கையைப் பார்த்து வியந்த ஆஞ்சநேயர் கூறியது. அன்றாடம் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.



    யா ஹி வைஸ்ரவணே லசஷ்மி: யாசேந்த்ரே-ஹரிவாஹனே
    ஸா ராவண க்ருஹே ஸர்வா நித்யமேவானபாயிநீ
    யா ச ராஜ்ஞ: குபேரஸ்ய: யமஸ்ய: வருணஸ்ய:ச
    தாத்ருஸீ தத்விஸிஷ்டா வா ருத்தீ ரசேஷா க்ரு ஹேஷ்விஹ
    ஸ்வர்கோயம் தேவலோகோம் இந்த்ரஸ்யேயம் புரீ பவேத்
    ஸித்திர் வேயம் பராஹி ஸ்யாதித்யமன்யத மாருதி:
    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் சரஸ்வதிக்கு உகந்த இந்த சகலகலா வல்லி மாலையை தினமும் அல்லது தேர்வு நேரங்களில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளம்
    தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
    உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
    கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

    நாடும் சொற் சுவை பொருட் சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
    கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
    காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

    அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
    குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொலோப உளம்கொண்டு தெள்ளித்
    தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
    களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

    தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
    தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
    காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

    பஞ்சு அப்பு, இதம் தரும், செய்ய, பொற்பாத பங்கேருகம் என்
    நெஞ்சத்தடத்து அலராதது என்னேப நெடுந்தாள் கமலத்து
    அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
    கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!



    பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
    எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
    விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும், அன்பர்
    கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

    பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
    கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
    தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
    காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகலகலாவல்லியே!

    சொற்விற்பன்னமும், அவதானமும், கல்வி சொல்லவல்ல
    நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
    செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
    கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

    சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
    நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்ப நிலம்தோய் புழைக்கை
    நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
    கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலா வல்லியே!

    மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்ட மன்னரும், என்
    பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
    விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
    கண்கண்ட தெய்வம் உளதோப சகலகலா வல்லியே!
    எந்த செயல்பாடுகளாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி ஜோதிர்லிங்க அர்ச்சனை செய்து வந்தால் அதில் வெற்றியும் அதிக பலன்களும் கிடைக்கும்.
    எந்த விஷயமாக இருந்தாலும், எந்த செயல்பாடுகளாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால் தான், அதில் வெற்றியும் அதிக பலன்களும் கிடைக்கும். அதிலும், கடவுளை வணங்குவதில் ஒருமுகப்படுத்துதல் என்பது மிக முக்கியமானதாகும்.

    மனதை ஒருமுகப்படுத்தும் ஜோதிர்லிங்க அர்ச்சனையை தற்பொழுது பார்ப்போம்.

    சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.



    ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.
    செவ்வாய் தோஷம், திருமணம் தடைப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை மனதில் உருவகித்து இந்த போற்றியை பாராயணம் செய்ய வேண்டும்.
    தனலாபம், பூமிலாபம், எதிரிகளிடம் வெற்றி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, திருமணம் போன்றவைகளுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை வள்ளி தெய்வானையுடன் மனதில் உருவகித்து இந்த போற்றியை பாராயணம் செய்ய வாழ்வில் வளம் பெறலாம்.

    ஓம் அழகா போற்றி
    ஓம் அறிவே போற்றி
    ஓம் அரன் மகனே போற்றி
    ஓம் அயன்மால் மருகா போற்றி

    ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
    ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
    ஓம் பன்னிருகை வேலவா போற்றி
    ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

    ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
    ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
    ஓம் இடர் களைவோனே போற்றி

    ஓம் உமையவள் மகனே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

    ஓம் ஓம்கார சொருபனே போற்றி
    ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
    ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
    ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

    ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
    ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
    ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
    ஓம் சித்தர்கள் வசமான செவ்வேள் போற்றி

    ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
    ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
    ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
    ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

    ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
    ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
    ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
    ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

    ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
    ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
    ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
    ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

    ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
    ஓம் ஔவைக் கருளியவனே போற்றி
    ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
    ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கதிர் வேலவனே போற்றி
    ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
    ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

    ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
    ஓம் அறுபடை வீடுடையவா போற்றி
    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

    ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
    ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
    ஓம் மகா சேனனே போற்றி
    ஓம் மயில் வாகனனே போற்றி

    ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
    ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
    ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
    ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி



    ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
    ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
    ஓம் அமிர்தாம் தமிழின் தலைவா போற்றி
    ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி

    ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
    ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
    ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
    ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

    ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
    ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
    ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
    ஓம் சரவணபவ சண்முகா போற்றி

    ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
    ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
    ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
    ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

    ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
    ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
    ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
    ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

    ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
    ஓம் யோக சித்தியே அழகே போற்றி
    ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
    ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி

    ஓம் கருணைபொழி போருர்க் கந்தா போற்றி
    ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
    ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
    ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

    ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
    ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
    ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
    ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

    ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
    ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
    ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
    ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

    ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
    ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
    ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
    ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

    ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
    ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
    ஓம் பழமுதிர்ச் சோலைப் பதியே போற்றி
    ஓம் பத்துமலை முத்துக்குமரா போற்றி

    ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
    ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
    ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
    ஓம் இருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

    ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
    ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
    ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
    ஓம் போற்றி...! போற்றி...!! ஜெய ஜெய வேலவா போற்றி

    முருகா, ஸ்கந்தா, சண்முகா இன்னல்கள் நீக்கி உன்னை சரணடைவோருக்கு எல்லா நலமும் வளமும் தந்தருள்வாய் ஆறுபடையப்பா....! குமரா...! உன் திருவடி தொழுதனம் போற்றியே.....!
    தோஷம், பிரச்சனை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பைவரருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.
    விரித்த பல்கதிர்கொள் சூலம்
    வெடிபடு தமருகம்கை
    தரித்ததோர் கோலகால பைரவனாகி
    வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
    ஒண்திருமேனி வாய் விள்ளச்
    சிரித்தருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வனாரே

    திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து பகளாமுகி தேவியை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் பல அடையலாம்.
    பகளாமுகி தேவி என்பவர், ருத்ர பகவானுக்கு உதவி செய்தவள். மஞ்சள் நிறப் பூ போன்ற மேனியைக் கொண்டவள். இவள் எட்டுக் கரங்களை கொண்டவள். இடது கரங்களில் பாசம், அங்குசம், சக்தி, வரம் ஆகியவற்றையும், வலது கரங்களில் வஜ்ரம், கதை, நாக்கு, அபயம் ஆகியவற்றையும் ஏந்தி இருக்கிறாள்.

    இவள் அணியும் அனைத்தும் மஞ்சள் நிறம் கொண்ட பொருட்களே. மஞ்சள் நிறம் கொண்ட இந்த தேவி எப்போதும் மகாவிஷ்ணு போன்று பீதாம்பரம் தரிசித்திருப்பதால், ‘பீதாம்பசா’ என்றும் அழைக்கப்படுகிறாள்.

    மகா விஷ்ணு பகளாமுகி காயத்ரி மந்திரத்தை பிரம்மாவிற்கும், பிரம்மா சாங்க்யாயனர் என்ற மகரிஷிக்கும் உபதேசித்தார். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து பகளாமுகி தேவியை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் பல அடையலாம்.



    பகளாமுகி காயத்ரி மந்திரம்  :

    ‘ஹ்ரீம் ப்ரம்ஹாஸ்தர வித்யாயை வித்மேஹே
    பீதாம்பராயை தீமஹி
    தன்னோ பகளாஹ் ப்ரசோதயாத்’

    பிரம்மாஸ்திர வித்தைக்கு உரியவளை அறிந்து கொள்வோம். பீதாம்பரத்தை உடுத்தியிருக்கும் அந்த தேவி மீது தியானம் செய்வோம். பகளாமுகி தேவியான அவள் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து அருள் செய்வாள் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால், ஆபத்துகள் விலகும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பப் பிரச்சினை தீரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
    மன தைரியம் பெறுவதற்கு காஞ்சி மகாப்பெரியவர் நமக்கு அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அனுமனை வழிபாடு செய்த பின் உச்சரிக்க வேண்டும்.
    மன தைரியம் பெறுவதற்கு உச்சரிக்க வேண்டிய ஸ்லோகம்

    புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்



    - ஸ்ரீஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை முடியும்போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என அருளியுள்ளார் காஞ்சிப்பெரியவர்.
    ×