என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இத்துதியை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி திருமால் திருவருள் கிடைக்கும்.
    கநகருசிரா காவ்யாக்யாதா சநைஸ்சரணோசிதா
    ச்ரிதகுரு புதா பாஸ்வத் ரூபா த்விஜாதிபஸேவிதா
    விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
    த்வமஸி மஹதீ விச்வேஷாம் ந: ஸுபா க்ரஹமண்டலீ
                             
    பொருள்: திருமாலின் திருவடித் தாமரைகளில் சரணடைந்திருக்கும் நவகிரகங்கள் எப்போதும் எனக்கு சுபங்களை அளிக்கட்டும். அந்த கிரகங்கள் ஏற்படுத்தக்கூடிய எல்லாவகை தோஷங்களையும் அந்த நாராயணனாகிய திருமால் போக்கட்டும். அவருக்கு நமஸ்காரம். (இந்த ஸ்லோகத்தில் சூரியன் முதலிய ஏழு முக்கிய கிரகங்களின் திருப்பெயர்களோடு சாயா கிரகங்களாக விளங்கும் ராகு, கேதுவின் பீஜாக்ஷரங்களும் மறைமுகமாக அமைந்துள்ளன. இத்துதியை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி திருமால் திருவருள் சித்திக்கும்.)

    குடும்பத்தில் ஏற்படும் துன்பங்கள், பிரச்சனைகள் தீர அங்காள பரமேஸ்வரிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
    ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே
    ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
    பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
    அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!

    இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்க்கையில் துன்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.
    நமாமி சாய் குரு பாத பங்கஜம் |
    கரோமி பாபா தவ பூஜனம் வரம் |
    வதாமி சாய் சுப நாம நிர்மலம் |
    ஸ்மராமி பாபா தவ தத்வ மவ்யயம் |
    சச்சிதானந்த ரூபாய பக்தானுக்ரஹ காரினே |
    ஷீரடின்யாய ஸ்தைகதேஹாய ஷாயீஷாய நமோ நமஹ |
    ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய சர்வதாயச்ச விஷ்ணவே |
    ஸ்ருஷ்டீச்ச த்ரிஸ்வரூபாய சாயிநாதாயதே நமஹ|
    சாய் சாயிதி சாயிதி ஸ்மர்தவ்யம் நாம சஜ்ஜனயே|
    சஹஸ்ர நாம தத்துல்யம் சாயி நாம வரப்ரதம் |
    ஸ்ரீ சாயிதி சதா ஸ்நானம் |
    ஸ்ரீ சாயிதி சதா ஜபஹா |
    ஸ்ரீ சாயிதி சதா த்யானம் |
     சதா சாயிதி கீர்த்தனம் ||
    தைப்பூசமான இன்று முருகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷம் விலகும். விரும்பியன எல்லாம் கிட்டும்.
    ஸிந்தூராருணகாந்திமிந்து வதனம் கேயூரஹாராதிமி:
    திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்கஸ்ய ஸெளக்யப்ரதம்
    அம்போஜா பய சக்தி குக்குடதரம் ரக்தாங்காதாம் சுகம்
    ஸுப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்

    - ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்லோகம்

    பொருள்:

    குங்குமம் போன்ற சிவந்த நிறம் கொண்டவரே, சந்திரன் போன்ற ஒளியுடன் கூடிய திருமுகத்தினரே, சுப்ரமண்ய ஸ்வாமியே, நமஸ்காரம். கேயூரம், ஹாரம் முதலிய திவ்யாபரணங்களால் பிரகாசிக்கும் அழகுத் திருமேனி கொண்டவரே, சொர்க்கத்திற்கே சுகமளிப்பவரே, தாமரை மலர், அபயம், சக்தி, சேவல் தாங்கும் நான்கு கரங்களைக் கொண்டவரே, சுப்ரமண்ய ஸ்வாமியே நமஸ்காரம். செஞ்சந்தனப் பூசி, செந்நிற ஆடையும் தரித்தவரே, தன்னை வணங்குபவரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்ய ஸ்வாமியே நமஸ்காரம்.

    (இத்துதியை தைப்பூச தினத்தன்றும் (இன்று), ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அரளிப் பூ சரத்தை முருகப்பெருமானுக்கு சாத்தி பாராயணம் செய்து வணங்கினால் செவ்வாய் தோஷம் விலகும். விரும்பியன எல்லாம் கிட்டும்.)
    நரசிம்மரை வழிபடும் போது தினமும் 108 முறை இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், மனதில் தைரியம் உண்டாகும். பகைவர்களால் வரும் ஆபத்து விலகும்.
    நரசிம்மர் காயத்ரி :

    ‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
    தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
    தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’

    பொருள் :

    வஜ்ரநாகனை நாம் அறிந்து கொள்வோம். அருளை வழங்கும் அந்த இறைவனின் மீது நாம் தியானம் செய்வோம். நரசிம்மனாகிய அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    நரசிம்மரை வழிபடும் போது தினமும் 108 முறை இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், மனதில் தைரியம் உண்டாகும். பகைவர்களால் வரும் ஆபத்து விலகும். பதவிகள் வந்து சேரும். முக்தியை அடையலாம்.
    வினை தீர்க்கும் விநாயகனை தினமும் வழிபட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த போற்றியை சொல்லி வந்தால் பிரச்சனைகள் யாவும் பனிபோல் விலகி விடும்.
    ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
    ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
    ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
    ஓம் விடலை விரும்பினாய் போற்றி
    ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
    ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
    ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
    ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
    ஓம் பாவமறுப்பாய் போற்றி
    ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி
    கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் நந்தியின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒருங்கே உண்டாகும்.
    சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
    சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
    கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
    கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி...!

    பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
    பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
    நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
    நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி...!

    செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
    சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
    மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
    மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி...!

    அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
    அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
    வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
    வணங்குகிறோம் எமைக்காக்க வருக...!

    நந்தி பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
    பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
    வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
    வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி...!

    கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
    கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
    வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
    விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி...!

    வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
    வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
    சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
    செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி...!

    கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
    குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
    பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
    புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி...!

    மேற்கண்ட துதியினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் நந்தியின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒருங்கே உண்டாகும்.

    தென்னாடுடைய சிவனே போற்றி…!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

    வாராஹி அம்மனுக்கு உகந்த அஷ்டோத்திர சத நாமாவளி பார்க்கலாம். இந்த நாமாவளியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் பயம் விலகும்.
    ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
    ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
    ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
    ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
    ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
    ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
    ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
    ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:

    சுதர்சனருக்கு அபிஷேகம் அர்ச்சனை, பூஜை செய்து, காயத்ரி மந்திரத்தை தினமும் 108 தடவைச் சொல்லி வருவது பல்வேறு நன்மைகளை வழங்கும்.
    திருமால் தனது கையில் வைத்திருக்கும் சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவார்கள். இவர் திருமாலின் தசாவதாரங்களில் வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரங்களின் குணங்களை ஒருங்கே பெற்றவர். பக்தர்களுக்கு ஞானத்தைத் தந்து பயத்தை அழிக்கும் தன்மை கொண்டவர். சுதர்சனருக்கு எட்டு முதல் 32 கரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    தீமை செய்பவர்களை அழிப்பது இவரது பணிகளில் ஒன்று. இந்திரத்துய்மன் என்பவன் யானையாக பிறந்த போது, கூடு என்பவன் முதலையாகப் பிறந்தான். இறை பூஜைக்காக பூப்பறிக்கச் சென்ற யானையின் காலை, குளத்தில் இருந்த முதலை கவ்விக்கொண்டது. அப்போது திருமால், சுதர்சனரை அனுப்பியே முதலையைக் கொன்றார் என்பது புராண வரலாறு. கிருஷ்ண பகவானை பழித்து பேசிய சிசுபாலனைக் கொன்றதும், துர்வாச முனிவரை விரட்டி அவரது கர்வத்தை அகற்றியதும் சுதர்சனர்தான்.

    இவரை ஆலயங்களில் வழிபடுவதுடன், வீட்டில் எந்திர வடிவில் வைத்தும் வழிபாடு செய்யலாம். பூஜை செய்யும் பொழுது, அபிஷேகம் அர்ச்சனை, சுதர்சன அஷ்டகம் முதலியவற்றைச் சொல்லி கற்பூர தீபம் காட்டும் பொழுது சுதர்சனருக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது உத்தமம். இந்த மந்திரத்தை தினமும் 108 தடவைச் சொல்லி வருவது பல்வேறு நன்மைகளை வழங்கும்.

    சுதர்சன காயத்ரி மந்திரம் :

    ‘ஓம் சுதர்ஹநாய வித்மஹே
    மஹாஸ்வாலாய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’

    திருமாலின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனரை அறிந்து கொள்வோம். மகா ஜூவாலையாகத் திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம். தீமையை அழிக்கும் அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.
    கந்தசஷ்டி விரத நாட்களில் முருகனுக்கு உகந்த வேல் அஷ்டோத்திர சத நாமாவாளி எனப்படும் 108 போற்றியைப் படித்தால் பயம் நீங்கி நன்மை உண்டாகும்.
    ஓம் அருள்வேல் போற்றி
    ஓம் அபயவேல் போற்றி
    ஓம் அழகுவேல் போற்றி
    ஓம் அரியவேல் போற்றி
    ஓம் அணைக்கும் வேல் போற்றி
    ஓம் அன்புவேல் போற்றி
    ஓம் அற்புதவேல் போற்றி
    ஓம் அடக்கும்வேல் போற்றி
    ஓம் அந்தக எதிர்வேல் போற்றி
    ஓம் ஆளும்வேல் போற்றி
    ஓம் ஆட்கொள் வேல் போற்றி
    ஓம் இனிய வேல் போற்றி
    ஓம் இரங்கு வேல் போற்றி
    ஓம் இலை வேல் போற்றி
    ஓம் இறை வேல் போற்றி
    ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    ஓம் ஈடிலா வேல் போற்றி
    ஓம் உக்கிரவேல் போற்றி
    ஓம் உய்க்கும் வேல் போற்றி
    ஓம் எழில்வேல் போற்றி
    ஓம் எளியவேல் போற்றி
    ஓம் எரிவேல் போற்றி
    ஓம் எதிர்வேல் போற்றி
    ஓம் ஒளிர்வேல் போற்றி
    ஓம் ஒப்பில் வேல் போற்றி
    ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    ஓம் ஓங்கார வேல் போற்றி
    ஓம் கதிர்வேல் போற்றி
    ஓம் கனகவேல் போற்றி
    ஓம் கருணைவேல் போற்றி
    ஓம் கந்தவேல் போற்றி
    ஓம் கற்பக வேல் போற்றி
    ஓம் கம்பீர வேல் போற்றி
    ஓம் கூர்வேல் போற்றி
    ஓம் கூத்தன் வேல் போற்றி
    ஓம் கொடுவேல் போற்றி
    ஓம் கொற்ற வேல் போற்றி
    ஓம் சமர்வேல் போற்றி
    ஓம் சம்கார வேல் போற்றி
    ஓம் சக்திவேல் போற்றி
    ஓம் சதுர்வேல் போற்றி
    ஓம் சங்கரன் வேல் போற்றி
    ஓம் சண்முக வேல் போற்றி
    ஓம் சமரில் வேல் போற்றி
    ஓம் சர்வசக்திவேல் போற்றி
    ஓம் சினவேல் போற்றி
    ஓம் சீறும்வேல் போற்றி
    ஓம் சிவவேல் போற்றி
    ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
    ஓம் சித்ரவேல் போற்றி
    ஓம் சிங்கார வேல் போற்றி
    ஓம் சுரர்வேல் போற்றி
    ஓம் சுடர்வேல் போற்றி
    ஓம் சுழல்வேல் போற்றி
    ஓம் சூரவேல்போற்றி
    ஓம் ஞானவேல் போற்றி
    ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    ஓம் தனிவேல் போற்றி
    ஓம் தாரைவேல் போற்றி
    ஓம் திருவேல் போற்றி
    ஓம் திகழ்வேல் போற்றி
    ஓம் தீரவேல் போற்றி
    ஓம் தீதழிவேல் போற்றி
    ஓம் துணைவேல் போற்றி
    ஓம் துளைக்கும்வேல் போற்றி
    ஓம் நல்வேல் போற்றி
    ஓம் நீள்வேல் போற்றி
    ஓம் நுண்வேல் போற்றி
    ஓம் நெடுவேல் போற்றி
    ஓம் பருவேல் போற்றி
    ஓம் பரன்வேல் போற்றி
    ஓம் படைவேல் போற்றி
    ஓம் பக்தர்வேல் போற்றி
    ஓம் புகழ்வேல் போற்றி
    ஓம் புகல்வேல் போற்றி
    ஓம் புஷ்பவேல் போற்றி
    ஓம் புனிதவேல் போற்றி
    ஓம் புண்யவேல் போற்றி
    ஓம் பூஜ்யவேல் போற்றி
    ஓம் பெருவேல் போற்றி
    ஓம் பிரம்மவேல் போற்றி
    ஓம் பொருவேல் போற்றி
    ஓம் பொறுக்கும் வேல் போற்றி
    ஓம் மந்திரவேல் போற்றி
    ஓம் மலநாசகவேல் போற்றி
    ஓம் முனைவேல் போற்றி
    ஓம் முரண்வேல் போற்றி
    ஓம் முருகன்வேல் போற்றி
    ஓம் முக்தி தருவேல் போற்றி
    ஓம் ரத்தின வேல் போற்றி
    ஓம் ராஜவேல் போற்றி
    ஓம் ருத்திரவேல் போற்றி
    ஓம் ருணவிமோசன வேல் போற்றி
    ஓம் வடிவேல் போற்றி
    ஓம் வஜ்ரவேல் போற்றி
    ஓம் வல்வேல் போற்றி
    ஓம் வளர்வேல் போற்றி
    ஓம் வழிவிடுவேல் போற்றி
    ஓம் வரமருள்வேல் போற்றி
    ஓம் விளையாடும் வேல் போற்றி
    ஓம் வினைபொடி வேல் போற்றி
    ஓம் வீரவேல்போற்றி
    ஓம் விசித்திர வேல் போற்றி
    ஓம் வெல்வேல் போற்றி
    ஓம் வெற்றிவேல் போற்றி
    ஓம் ஜயவேல்போற்றி
    ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி

    கந்தசஷ்டியை ஓட்டி விரதம் இருக்கும் அன்பர்கள் முருகப் பெருமானையும், அவரது வேலையும் வணங்குவது பெரும் பலனைத்தரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில் வேல் அஷ்டோத்திர சத நாமாவாளி எனப்படும் 108 போற்றியைப் படித்தால் பயம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.
    தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடினால் துன்பங்கள் நீங்கி வளமான வாழ்வை பெறலாம்.
    அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில்
    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
    முருகாஎன்று ஓதுவார் முன்.

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
    குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    தொளைத்த வேலுண்டே துணை.

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
    வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

    திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
    பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
    மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
    குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.

    கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
    உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
    தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
    வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

    மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
    வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
    கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
    எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி மேருவையே.

    ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
    ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
    மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!
    மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே இராஜ யோக தியானம் எனப்படுகிறது. ஜோதிர்லிங்கங்களுக்கு அர்ச்சனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

    ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.
    ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.

    ×