search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள்
    X

    பெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள்

    பெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த விரதங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

    சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.

    கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
     
    Next Story
    ×