என் மலர்
இஸ்லாம்
கித்ரு (அலை) மூஸா (அலை)இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்
மூஸா (அலை) பொறுமை காப்பதாக வாக்களித்து, அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை) அவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறார்கள்.
இருவரும் நடந்து நடந்து கடலோரத்திற்கு வந்து அங்கிருந்த ஒரு மரக்கலத்தில் ஏறினார்கள். கித்ரு (அலை) அவர்களை அந்த மரக்கலத்தில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருந்ததால் அவர்களை மறுப்புச் சொல்லாமல் ஏற்றிக் கொண்டனர்.
அப்போது ஒரு பறவை தம் அலகில் கொஞ்சம் தண்ணீருடன் மரக்கலத்தில் வந்து அமர்ந்ததைக் கண்ட கித்ரு (அலை), அந்தப் பறவையைச் சுட்டிக்காட்டி “நமது அறிவை அல்லாஹ்வின் அறிவோடும் ஞானத்தோடும் ஒப்பிடும்போது, நமது அறிவு இந்தப் பறவை கடலிலிருந்து ஒரு சொட்டு நீரைக் குடிப்பதுபோல்தான்” என்று மூஸா (அலை) அவர்களிடம் விளக்கினார்கள்.
மரக்கலம் நெடுபயணத்தில் சென்று கடலுக்கு நடுவில் வந்ததும், திடீரென்று கித்ரு (அலை) ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தில் ஓர் ஓட்டையைப் போட்டார்கள்.
அதைக் கண்டு பதறிய மூஸா (அலை) “என்ன செய்கிறீர்கள்?” என்று பொறுமை இழந்து கேட்டார்கள்.
அதற்கு கித்ரு (அலை) எந்த பதிலும் தராததால் மூஸா (அலை) தொடர்ந்து “இந்த மரக்கலத்தை மூழ்கடிக்கப்போகிறீர்களா? இதில் உள்ளவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓட்டையைப் போட்டீர்கள்? இது மிகவும் ஆபத்தான காரியமாயிற்றே!? என்று கூறினார்கள்.
உடனே அதற்கு கித்ரு (அலை), “நான் நீங்கள் பொறுமை காப்பீர்கள். என்ன நடந்தாலும் நானாக அது பற்றி உங்களுக்கு விளக்கம் தரும் வரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்களுடைய வாக்குறுதியை மறந்துவிட்டீர்களா?” என்று மூஸா (அலை) அவர்களுக்கு நினைவுப்படுத்தினார்கள்.
மூஸா (அலை) தமது வாக்கை நினைவுகூர்ந்தவர்களாக அமைதியாகவும் சங்கடமாகவும் இருந்தார்கள். மறுகணமே மூஸா (அலை) “இனி உங்களை நான் எந்த கேள்வியும் கேட்கவே மாட்டேன்” என்று உறுதியளித்தார்கள்.
மரக்கலம் கரைக்கு வந்தது. அதிலிருந்து அவர்கள் இறங்கிக் கொண்டார்கள். மீண்டும் நடக்கலானார்கள்.
திருக்குர்ஆன் 18:71-74
- ஜெஸிலா பானு.

கித்ரு (அலை), மூஸா (அலை) இருவரிடையே நடந்த உரையாடல்.
இறைவன் அறிவில் சிறந்தவர் என்று குறிப்பிட்டவரை இரு கடல்களும் சேரும் இடத்தில் மூஸா (அலை) அவர்கள் சந்தித்தார்கள். அவரிடம் மூஸா (அலை) “உங்களுக்குத் தெரிந்ததை எனக்குக் கற்றுத் தருவீர்களா?” என்று மிகவும் அடக்கமாகக் கேட்டார்கள்.
அதற்கு மற்றவர் தம்மை கித்ரு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவராக ஒரு புன்னகையோடு எதிர்கொண்டார். “நாம் சேர்ந்தே பயணிக்கலாம். ஆனால் அதற்கான பொறுமை உங்களிடம் இருக்காது” என்று கூறினார்.
அதனை உடனே மறுத்து மூஸா (அலை) “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நான் பொறுமையுள்ளவனாக இருப்பேன். என்ன நிகழ்ந்தாலும் பொறுமை காப்பேன்” என்றார்கள்.
அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை), மூஸா (அலை) அவர்களிடம், “கண்டிப்பாக உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது. காரணம், உங்களுக்கு முழுமையான ஞானம் இல்லாத விஷயத்தில் நீங்கள் கண்டிப்பாகப் பொறுமை இழப்பீர்கள். நம்மிருவருக்கும் ஒத்துவராது, கண்டிப்பாக கருத்து மோதல் ஏற்படும்” என்று கூறினார்கள்.
“இல்லை. நான் பொறுமையாக இருப்பதில் உறுதியாக இருக்கிறேன். உங்கள் கருத்துக்கு ஏற்ப நடந்து கொள்வேன்” என்று மூஸா (அலை) உறுதியளித்தார்கள்.
அதற்கு கித்ரு (அலை) “அப்படியானால், நீங்கள் என்னைப் பின் தொடர்வதானால், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாகவே அதைப் பற்றி உங்களுக்கு விளக்கம் தரும்வரையில் பொறுமையாக இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் அது பற்றி என்னிடம் கேட்கவே கூடாது. இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொள்வதாக இருந்தால் நீங்கள் என்னோடு பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை” என்று சொன்னார்கள்.
மூஸா (அலை) அவர்களும் அதற்கு முழு மனதாக சம்மதித்து இருவரும் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினார்கள்.
திருக்குர்ஆன் 18:66-70

சர்வதேச திருக்குர்ஆன் விருதில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒரே தமிழர் அஹ்மத் உமர்.
துபாயில் நடைபெறும் சர்வதேச திருக்குர்ஆன் விருதில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒரே தமிழர் அஹ்மத் உமர். இவர் இலங்கையின் புறநகர் பகுதியான அதுல்கம பண்டாரகமவைச் சேர்ந்தவர்.
தனது பத்தாவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து அரை நாள் மட்டுமே பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தவர், ஆர்வமிகுதியால் தமது பன்னிரெண்டாம் வயது முதல் முழுநேரமும் திருக்குர்ஆனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தமது பள்ளிப் படிப்புடன் சேர்த்து திருக்குர்ஆனையும் மனனம் செய்து முடித்துவிட்டார்.
தந்தையில்லாத அஹ்மத் உமருக்கு தனது படிப்பில் மிகவும் உறுதுணையாக இருந்து உற்சாகம் தந்தது தனது தாய் நூருல் ஷிஃபா என்கிறார்.
அஹ்மத் உமரின் தாய்மாமன்தான் அந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து பண உதவி செய்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடந்த குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவர், துபாய் சர்வதேசப் போட்டியில் பங்குபெறும் தகுதிச் சுற்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். தகுதி பெற்றவரை இலங்கை அரசாங்கமே தமது செலவில் இப்போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இப்போட்டியில் குரல், உச்சரிப்பு, நினைவாற்றல் என்று எல்லாத் தகுதியும் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ரூபாய் ஐம்பது லட்சத்தை முதல் பரிசாகக் கொண்டுள்ள இப்போட்டியில் முதல் ஐந்து இடத்திற்குள் வரவேண்டுமென்பதே தமது குறிக்கோள் என்கிறார் அஹ்மத் உமர்.
நல்ல உச்சரிப்புடன், சரியான குரல்வளத்துடன் தமது அமர்வை முழுமைப்படுத்திவிட்ட அஹ்மத் உமர் நினைவாற்றல் தேர்வில் ஒரு சில தவறே செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜாமியா இனாமி ஹஸன் பள்ளியில் பயன்றவர் வெற்றி பெற்று தம் நாட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். தமது வருங்காலத் திட்டம் குறித்து கேட்கும் போது, மார்க்க சட்ட திட்டங்களை சரியாகக் கற்க வேண்டும்; மனனம் செய்த திருக்குர்ஆன் வசனங்களின் விளக்கத்தையும் மனனம் செய்ய வேண்டும்; அரபி மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்; மவ்லவியாக வேண்டும் என்று சொன்னவர், கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்பதே தமது தலையாய லட்சியம் என்றார்.
இவர் இப்போட்டியில் வெற்றி பெறுவாரா தம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பாரா என்று இன்னும் சில தினங்களில் இப்போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.

எல்லாம் அறிந்தவர் என்று இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது. அது இறைத்தூதராக இருந்தாலும் சரியே. ஒருவருக்குத் தெரியாத விஷயம் மற்றவருக்குத் தெரிந்தே இருக்கும்.
மூஸா (அலை) மக்களுக்கு போதனைகள் செய்து வந்தார்கள். ஒருநாள் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து “மூஸாவே! உங்களைவிட அறிவில் சிறந்தவர், எல்லாம் அறிந்தவர் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?” என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை) “இல்லை” என்று சொல்லிவிட்டார்கள். தம் மனதில் ‘நம்மைவிட அதிகம் தெரிந்தவர் யாரும் இருக்க முடியாது’ என்றும் நம்பினார்கள்.
ஆணவத்தை விரும்பாத இறைவன் உடனே ஓர் இறைச்செய்தியை மூஸா (அலை) அவர்களுக்கு அனுப்பினான் ‘எல்லாம் அறிந்தவர் என்று இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது. அது இறைத்தூதராக இருந்தாலும் சரியே. ஒருவருக்குத் தெரியாத விஷயம் மற்றவருக்குத் தெரிந்தே இருக்கும். ஒருவரை ஒருவர் அறிவில் சிறந்திருப்பது இயல்பு. என்னுடைய அடியார் கிதிர் அறிவில் சிறந்தவர்’ என்று அறிவித்தான்.
உடனே மூஸா (அலை) அவர்களுக்கு அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் ஒரு மீனை அவர்களுக்கொரு அடையாளமாக ஏற்படுத்தினான். “அந்த மீனைத் தொலைக்கும் இடத்தில் அவரைக் காண்பீர்கள்” என்றும் சொல்லிவிட்டான்.
மூஸா (அலை) தன்னுடன் ஓர் இறைநம்பிக்கையாளரைப் பணியாளராகத் தம்முடன் அழைத்துக் கொண்டு மீனை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
இரு கடல்களும் சேரும் இடத்தை அடைந்ததும் அங்கு சிறிது ஓய்வெடுக்கலாம் என்று கண் அயர்கிறார்கள் மூஸா (அலை).
அந்த இடத்தில் பாத்திரத்திலிருந்த மீன் கடலில் துள்ளிக் குதித்து நீந்திச் சென்றுவிடுகிறது. இதனைக் கண்ணுற்ற பணியாளர் இதுபற்றி மூஸா (அலை) அவர்களிடம் சொல்ல மறந்துவிடுகிறார். ஓய்விலிருந்து எழுந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள் மூஸா (அலை).
சிறிது தூரம் சென்ற பிறகு, "காலை உணவைச் சாப்பிடலாம். எடுத்து வாருங்கள்" என்றார்கள் மூஸா (அலை). அப்போதுதான் அந்த மீனைப் பற்றி நினைவு வந்தவராக அப்பணியாள் ‘அக்கற்பாறையில் நாம் ஓய்வெடுத்த சமயத்தில் மீன் துள்ளிச் சென்றுவிட்டது’ என்று கூறினார். ‘ஆஹா, அதுதான் நாம் தேடிவந்த இடம்’ என்று கூறி இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
இவ்வாறு அவ்விருவரும் இறைவனின் நல்லாடியார்களில் ஒருவரை அங்கு கண்டார்கள்.
திருக்குர் ஆன் 18:60-65, ஸஹீஹ் புகாரி 74, 78.

துபாயில் இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்றுவரும் போட்டியில் பங்கேற்றவர்களில் 81 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிப் பெற்று, இதுவரை 41 பங்கேற்பாளர்களின் போட்டி அமர்வுகள் முடிவடைந்துள்ளன.
இதனிடையே அரபு மொழியின் எழுத்தணிக் கண்காட்சியும் அதே இடத்தில் நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய கையெழுத்து பிரியர்களுக்கும் இந்தக் கண்காட்சி ஒரு பெரும் தீனியாக அமைந்தது.
கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா, கடந்த வியாழன் இரவு அரபி மொழி எழுத்தணிக் கண்காட்சியைகாலித் அல் ஜலாஃப், எமிரெட்ஸ் அரபு கேலிகிராஃபி சமூகத்தின் தலைவரின் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சி துபாய் கலை மற்றும் கலாச்சார ஆணையத்துடன் கூட்டாக நடைபெறுகிறது. கண்கவரும் பலவகையான கையெழுத்துகள் அடங்கிய இந்தக் கண்காட்சியில் ‘திவானி’ மற்றும் ‘துலுத்’ கையெழுத்துப்படிவம் வகைகளையும் கொண்டது.
சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார மன்றத்தின் ‘படைப்பாற்றல் விருது’ பெற்றவரும், குவைத் மற்றும் தாய்லாந்து அனைத்துலக கையெழுத்துக் கண்காட்சிகளில் கவுரவிக்கப்பட்ட புகழ்பெற்ற அமீரகத்துக் கையெழுத்தாளரான கலைஞர் ஃபாத்மா சலீம் இதில் கலந்து கொண்டார்.
குர்ஆன் மனனப்போட்டி மற்றும் எழுத்தணிப் போட்டிகள் உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களை நெருக்கமாக்குவதற்கும் ஒருவருக்கொருவரின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது என்று வந்திருந்த விருந்தினர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.
திருக்குர்ஆன் மனனப் போட்டியில் 25 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த வருடப் போட்டியில் பத்து வயதே நிரம்பிய நேபாளைச் சேர்ந்த ஷேக் முஹம்மது வசீர் அக்தர்தான் மிகவும் இளையவர். கிட்டதட்ட 25 வயதைத் தொடும் நெதர்லாந்தைச் சேர்ந்த பிலால் எல் இமானிதான் இப்போட்டியிலேயே வயதில் மூத்தவர்.
இப்போட்டில் இரண்டு பார்வையற்றவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஒருவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஹம்மது தாஹா மஹ்பூப் வரிக்கோட்டில் மற்றும் பனாமா நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் சலீம் பட்டேல்.
திருக்குர்ஆன் மனனப்போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு இரண்டரை லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 50 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெஸிலா பானு, துபாய்

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினரும், பிறகு அவர்களைத் தொடர்ந்து வருபவர்களும், பிறகு அவர்களையும் அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தினர் வருவர், அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும், அவர்களின் சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்
இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தில் உள்ளவற்றை மூஸா (அலை) அவர்கள் மக்களுக்கு போதித்து வந்தார்கள்.
“வாருங்கள்! இறைவன் நம் மீது விலக்கியிருப்பவற்றை ஓதிக் காண்பிக்கிறேன்” என்று சொல்லி மூஸா (அலை) வாசிக்கிறார் – “எப்பொருளையும் அல்லாஹ்வுக்கு இணையாக வைக்காதீர்கள். பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.
ஏனெனில் அல்லாஹ்வே உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் உணவளிக்கின்றான். வெளிப்படையான, இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமில்லாமல் கொலை செய்யாதீர்கள்” இவற்றை மக்கள் உணர்ந்து கொள்வதற்காகவே இறைவன் அருளிய வேதத்திலிருந்து மூஸா (அலை) போதித்தார்கள்.
தனிமையில் இருக்கும் போது மூஸா (அலை), இறைவன் தந்த கற்பலகையில் உள்ள இறைவனின் வார்த்தைகளை ஓதுகிறார்கள். அது பற்றி இறைவனிடம் கேட்கிறார்கள் “யா அல்லாஹ்! ஓர் உம்மத் அதாவது ஒரு தலைமுறையினர் வருவார்கள், அவர்கள் கடைசியாகப் படைத்து அனுப்பப்படுவார்கள், ஆனால் முதலில் சொர்க்கம் புகுவார்கள் என்று படித்துப் பரவசமடைந்தேன். அது என்னுடைய மக்களாக இருக்கட்டுமே” என்று இறைவனிடம் கேட்கிறார்கள். அதற்கு அல்லாஹ் “இல்லை, அது முஹம்மதின் உம்மத்தினர்” என்று சொல்லிவிட்டான்.
மறுபடியும் மூஸா (அலை) “யா அல்லாஹ்! ஓர் உம்மத்தினர் உன்னுடைய இறை வசனங்களை மனனம் செய்து மனதிலிருந்து ஓதக்கூடியவர்களாக இருப்பார்கள். அதற்கு முன்னால் உள்ள அத்தனை சமூகத்தாரும் பார்த்து மட்டுமே ஓதக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன் “இல்லை, அது முஹம்மதின் உம்மத்தினருக்குத் தரப்பட்ட பாக்கியம்” என்று சொல்கிறான்.
இதுவும் தன் உம்மத்துக்கில்லையா என்று யோசித்தவர்களாக அடுத்த விஷயத்தைப் பற்றிக் கேட்கிறார்கள் மூஸா (அலை) “இறைவா! ஓர் உம்மத்தினர் கடந்து சென்ற வேதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், கடைசி வேதத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களாகவும் திகழ்ந்து, உலகத்தில் உள்ள கெட்ட சக்திகளுக்கு எதிராகப் போரிட்டு அழித்து, தஜ்ஜாலையும் எதிர்கொண்டு எதிர்த்துப் போராடுவார்கள் என்றுள்ளதே, என் சமுதாயத்தவர்களை அப்படி ஆக்குவாயாக அல்லாஹ்” என்று கேட்கிறார்கள். அதற்கும் இறைவன் “இல்லை மூஸாவே அதுவும் கடைசிக் காலத்தில் வரக்கூடிய முஹம்மதின் உம்மத் செய்யக் கூடியது” என்றான்.
இப்படியாக ஒவ்வொரு விஷயமாகக் கேட்டு அது முஹம்மதின் உம்மத்துக்கு என்று தெரிந்தவர்கள் இறுதியாக, “யா அல்லாஹ்! ஓர் உம்மத் வரும் அவர்கள் செய்யும் ஒரு நற்காரியத்திற்கு, பத்து நன்மைகளைத் தருவதாக இதில் குறிப்பிட்டுள்ளாயே!? அந்த பாக்கியத்தைப் பெறுபவர்கள் என் மக்களாக என் சமுதாயத்தவர்களாக இருக்கட்டுமே” என்று ஆவலுடன் கேட்கிறார்கள். அதையும் இறைவன் மறுத்து “இதுவும் முஹம்மதின் உம்மத்துக்குதான்” என்று சொன்னான்.
அதைக் கேட்ட மூஸா விரக்தியடைந்து தன் கையிலிருந்த பலகையை கீழே போட்டவர்களாக, மண்டியிட்டு “யா அல்லாஹ்! என்னையும் நீ முஹம்மதின் உம்மத்தாக்கிவிடு” என்று கேட்டார்கள்.
இந்நிகழ்வு 'இப்னு கத்தாதா' பதிவில் வந்துள்ளது.
இதன் மூலம் மூஸா (அலை) அவர்களுக்கே நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தாக வந்திருக்க வேண்டுமென்ற ஆவல் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினரும், பிறகு அவர்களைத் தொடர்ந்து வருபவர்களும், பிறகு அவர்களையும் அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தினர் வருவர், அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும், அவர்களின் சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்” என்று. (ஸஹிஹ் புகாரி 6429)
திருக்குர் ஆன் 6:151

எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே. எவர் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
பனூ இஸ்ராயீலர்களில் ஓர் இறைநம்பிக்கையாளர் இருந்தார். அவர் மிகப் பெரிய பணக்காரராகத் திகழ்ந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அந்த முதியவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவருடைய சகோதரனின் மகன் அவரை யாருக்கும் தெரியாமல் கொலை செய்து அவருடைய சடலத்தை வேறு குலத்தவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் கொண்டு போட்டுவிட்டு வந்துவிடுகிறார்.
மறுநாள் பிணத்தைக் கண்ட மக்கள் பீதியடைந்து இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம் ஓடி வந்து, “மூஸாவே! நம் குலத்தைச் சேர்ந்தவரை யார் கொலை செய்தார்கள் என்று உம் இறைவனிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றனர்.
மூஸா (அலை), அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவனின் கட்டளையை மக்களுக்கு விவரித்தார்கள் “ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியின் இறைச்சியை இறந்தவரின் உடலில் தேய்த்தால், இறந்தவர் உயிர் பெற்று எழுந்து, தன்னைக் கொன்றவர் யார் என்று சொல்வார்” என்று சொன்னார்கள்.
இதனைக் கேட்ட மக்கள் எரிச்சலடைந்தவர்களாக “மூஸாவே! எங்களைக் கிண்டல் செய்து பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கேட்டனர். இறைவனின் கட்டளையை அப்படிச் சொன்னவுடன் மூஸா (அலை) “அப்படி அறிவில்லாமல் பரிகசிக்கும் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக” என்று கூறினார்கள்.
மூஸா (அலை) உண்மையில்தான் அதைச் செய்யச் சொல்கிறார்கள் என்று புரிந்தவர்களாக. “அது எப்படிப்பட்ட மாடாக இருக்க வேண்டுமென்று இறைவனிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றனர். “அப்பசுமாடு அதிகக் கிழடாகவும் இருக்கக் கூடாது, கன்றாகவும் இருக்கக் கூடாது. இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும்” என்றார்கள் மூஸா (அலை).
அடுத்ததாக அதனுடைய நிறத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கும் சளைக்காமல் “பார்ப்பவர்களைப் பரவசம் செய்யும் நிறமாக இருக்க வேண்டும்” என்று விளக்கமளித்தார்கள். அதுமட்டுமின்றி “அது நிலத்தில் உழவோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாத ஆரோக்கியமான, எவ்விதத்திலும் வடுவில்லாததாக இருக்கும்” என்றும் இன்னும் மிக விவரமான தகவல்களையும் தந்தார்கள் மூஸா (அலை).
இறைவன் மீது உண்மையான நம்பிக்கைக் கொண்டவர்களாக யூதர்கள் இருந்திருந்தால் மூஸா (அலை) ஒரு மாட்டை அறுத்து, கொல்லப்பட்டவனின் மீது அடித்தால் இறந்தவன் உயிர் பெற்று, தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டுவான் என்று இறைவனின் கட்டளைப் பற்றிச் சொன்னதும் ஒரு மாட்டை அறுத்திருப்பார்கள். ஆனால் நம்பிக்கையற்ற அவர்கள் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
இறைவனின் அத்தாட்சிகளைக் கண்கூடாகப் பார்த்தும் அவர்கள் இதயங்கள் இறுகிவிட்டிருந்தது. திருமறையில் இறைவன் “யூதர்களில் ஒருசாரார் இறைவாக்கைப் புரிந்து கொண்டும் அதைத் தெரிந்து கொண்டே அதை மாற்றிவிட்டார்கள். ஆனால் நம்பிக்கைக் கொண்டவர்களை அவர்கள் சந்திக்கும்போது தாமும் நம்பிக்கைக் கொண்டவர்களாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் தவ்ராத்தையும் அவர்கள் பின்பற்றுவதில்லை” என்கிறான்.
இந்நிகழ்ச்சியின் காரணமாகத்தான் திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாத்திற்கு ‘சூரத்தல் பகரா’ அதாவது ‘மாடு’ என்று பெயர் வந்தது.
இறைவன் அருளிய தவ்ராத்தில் உள்ளவற்றை அவர்கள் சிலவற்றை மறைத்தும், சிலவற்றை மாற்றியும்விட்டனர். எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே. எவர் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 2:67-82
-ஜெஸிலா பானு.

இந்த ரமலானில் கூட்டுணர்வை போற்றுவோம், வேற்றுமை உணர்வுகளை மாற்றுவோம்.
‘ஜமாஅத்’ எனும் கூட்டமைப்புடன் செயல்படுவதை இஸ்லாம் மிகவும் விரும்புகிறது; வலியுறுத்துகிறது. கூட்டுத்தொழுகை, கூட்டு சஹர், கூட்டு இப்தார், கூட்டுத் தராவீஹ், கூட்டுக் குர்பானி, கூட்டு ஜகாத், கூட்டு ஹஜ், கூட்டு துஆ... என எங்கு திரும்பினாலும் அங்கு கூட்டமைப்பு இருப்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நபிகளார் நவின்றார்கள்: ‘அல்லாஹ்வின் உதவிக்கரம் கூட்டாகச் செயல்படுவதில் தான் இருக்கிறது’ (நூல்: பைஹகி).
‘கூட்டாகத்தொழுவது, தனியாகத்தொழுவதைவிட 27 மடங்கு அந்தஸ்து கிடைப்பதற்குரியது’. (நூல்: புகாரி, முஸ்லிம்)
‘இருவரின் உணவு மூவருக்குப் போதுமாகும், மூவரின் உணவு நால்வருக்குப் போதுமாகும்’. (நூல்: புகாரி)
இருவரின் உணவு நால்வருக்குப் போதுமாகும், நால்வரின் உணவு எட்டுப்பேருக்குப் போதுமாகும். (நூல்: முஸ்லிம்)
மேற்கண்ட நபி மொழிகளின் மூலம் எப்படியெல்லாம் கூடுதலாக நன்மைகள் பெற முடியும் என்பதை நாம் அறிய முடியும்.
புனிதமிகு இந்த ரமலான் நாட்களில் கூட்டாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்பு கள் உள்ளன. ஜமாத்தாக தொழுவது, சஹர் செய்வது, இப்தார் செய்வது, தராவீஹ் தொழுவது, திக்ர் செய்வது, துஆ செய்வது என கூட்டாக அமல் செய்வதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் ரமலானில் நிறைந்திருக்கின்றன.
நாம் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுகிறபோது எந்த ஒரு கடின காரியமும் மிக இலகுவாக ஆகி விடுகிறது.
அருளாளன் அல்லாஹ் கூறுகிறான்: ‘நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் (வேதநூலாகிய குர்ஆன் எனும்) கயிற்றைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (3:103)
திருக்குர்ஆன் காட்டும் வழியில் நடப்பது என்பது, இஸ்லாமிய வழிமுறைகளை சரியான முறைப்படி, ஒற்றுமையாக, ஒன்றிணைந்து, வறட்டுப் பிடிவாதங்களை நீக்கி கூட்டுணர்வை பற்றிப் பிடித்து நடப்பது என்பது தான். கூடவே ‘பிரிந்து விடாதீர்கள்’ என்ற எச்சரிக்கைச்சொல்லும் இத்துடன் இணைத்துப் பார்க்கத்தக்கதே.
இதனால்தான் ‘எவர் ஒரு சாண் அளவு ஒற்றுமையை விட்டும் சற்று விலகிச்சென்று விடுகிறாரோ அவர் தனது கழுத்திலிருந்து இஸ்லாமிய வளையத்தை கழட்டி விட்டவர் ஆவார். என நபிகளார் சொன்னார்கள் (அபூதாவூது). எனவே, ரமலான் மாத நோன்பு நமக்கு பலவழிகளிலும் ஒற்றுமை வாசல்களை தாராளமாக திறந்து வைத்திருக்கிறது. நாம் தான் உள்ளே நுழைவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது யோசிக்கும் நேரமல்ல. உடைந்து போன உள்ளங்களின் ஒற்றுமைகளை ஒன்றிணைத்து சுவாசிக்கும் நேரம் இது.
எனவே இந்த ரமலானில் கூட்டுணர்வை போற்றுவோம், வேற்றுமை உணர்வுகளை மாற்றுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.

பனூ இஸ்ராயீலர்களின் நலனுக்காக இறைவனிடம் மன்றாடிய மூஸா (அலை), இறைவனின் அருட்கொடைகளை மறந்து எதற்கும் திருப்தியடையாத யூதர்களை தாம் கட்டுப்படுத்த முடியாது என்று முடிவெடுத்தார்கள்.
எகிப்திலிருந்து வெளியேறிய பனூ இஸ்ராயீலர்கள் தங்குவதற்கு வீடே தேவையில்லாத அளவுக்கு இறைவன் மேகத்தை நிழலாக தந்து, சொர்க்கத்திலிருந்து உணவுப் பொருட்களை உட்கொள்ள தந்தும் திருப்தி அடையாத யூதர்கள் வெங்காயம், பருப்பு, வெள்ளரிக்காய், கீரை வேண்டுமென்று கேட்க, அதற்கு `நீங்கள் ஏதேனும் ஒரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள்` என்றார்கள் மூஸா (அலை).
அல்லாஹ், பனூ இஸ்ராயீலர்களின் விருப்பப்படி அவர்களுக்காக விதித்த ஒரு நகரத்தில் நுழைந்து அங்கு அவர்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசிக்கட்டும். அதன் வாயிலில் நுழையும்போது, பணிவுடன் தலைவணங்கி ‘ஹித்ததுன்’ அதாவது ‘எங்கள் பாவச்சுமைகள் நீங்கட்டும்’ என்று சொல்லி நுழையுங்கள் என்று கட்டளையிட்டான். அந்த நகரம் பாலஸ்தீனம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் பனூ இஸ்ராயீலர்கள் அதில் நுழைய மறுத்துவிட்டனர். அதில் ஏற்கெனவே குடியிருப்பவர்கள் மிக பலசாலியாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களைக் கொலை செய்துவிடுவார்கள் என்று பயப்படுவதாகச் சொல்லி அந்த நகரத்திற்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
ஆனால் அவர்களைச் சேர்ந்தவர்களில் இருந்தே இரண்டு நபர்கள் “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அந்நகரத்தில் நுழைந்து பார்ப்போம். அந்நகரத்தினரை எதிர்த்து நகரத்தில் வாசல் வரை நுழைய முயற்சிப்போம். அப்படி நம்மால் அங்கு செல்ல முடிந்துவிட்டால் நாம் வெற்றியாளர்களாகிவிடுவோம்” என்றும் சொல்லிப் பார்த்தார்கள்.
அதற்கவர்கள் “அந்நகரத்து மக்கள் அங்கிருக்கும் வரை அங்கு நாங்கள் நுழைய மாட்டோம். மூஸாவே! நீரும், உம்முடைய இறைவனும் சென்று அவர்களுடன் போர் செய்யுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறோம்” என்று நன்றி மறந்து திமிர்பிடித்தவர்களாகப் பேசினர். மூஸா (அலை) அவர்களால் யூதர்களின் பேச்சை சகித்துக் கொள்ள முடியாமல் சோர்ந்துவிட்டார்கள்.
யூதர்களுக்காக சட்டத்திட்டங்களைப் பெற நாற்பது நாட்கள் நோன்பு இருந்து திரும்பி வந்த மூஸா (அலை) அவர்கள், யூதர்கள் காளைக் கன்றை வணங்குவதைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து, நோன்பிருந்து பெற்று வந்த தவ்ராத் வேதம் வரையப் பெற்றிருந்த பலகைகளை எறிந்துவிட்டார்கள்.
மீண்டும் தம் பிரச்சாரத்தை தொடங்கி மக்களை பாவ மன்னிப்புக் கோரச் சொல்லி, அவர்களை தெளிய வைத்து, எறிந்துவிட்ட தவ்ராத் வேதத்தை எடுத்து, அதனை மக்களுக்காக வாங்கி வந்ததைத் தெரிவிக்கும்போது, “இது இறைவனிடம் இருந்துதான் வந்தது என்று எப்படி நம்புவது?” என்று கேள்வி கேட்டனர். உடனே யூதர்களிலேயே உயர்குலத்தவர்கள் என்று கருதிய மூத்தவர்கள் எழுபது பேரை அழைத்துக் கொண்டு மூஸா (அலை) தூர் சினாய் மலைக்குச் சென்றார்கள்.
அங்கு அவர்கள் மூஸா (அலை) இறைவனிடம் பேசியதை தம் காதால் கேட்டார்கள். இருப்பினும் பேசுவது இறைவன்தான் என்று நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்டார்கள். “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரை உன்னை நம்ப மாட்டோம்” என்று கூறினார்கள். அதே நொடியில் இறைவனின் கோபம் ஓர் இடி முழக்கமாக அவர்களைத் தாக்கியது. அந்த எழுபது பேரும் உயிர் இழந்தார்கள்.
அதைக் கண்டு பதறிவிட்டார்கள் மூஸா (அலை). இவர்கள் எழுபது பேரையும் திரும்பி அழைத்துச் செல்லாவிட்டால் என்ன நேருமோ என்று இறைவனிடம் மன்றாடினார்கள். “என் இறைவா! இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே!? எங்களில் உள்ள அறிவில்லாதவர்கள் செய்த குற்றத்திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்துவிடுகிறாயே. நீ நாடியவர்களை வழிதவறவும் விடுகிறாய், நேர் வழியில் செலுத்தவும் செய்கிறாய். நீதான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு பாவ மன்னிப்பு அளிப்பாயாக. எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்கள்.
இறைவன் மூஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பினான். இறைவன் ‘தூர்’ மலையை அப்படியே அவர்கள் மேல் உயர்த்தினான். அவர்களுக்குக் கொடுத்த வேதத்தை உறுதியுடன் பற்றிக் கொள்ளும்படியும், அதில் உள்ளவற்றை நினைவில் வைத்துக் கொண்டு நன்மைகள் புரியும்படியும் கட்டளை புரிந்தான். அப்படி செய்பவர்களே பயபக்தியுடையவர்கள் என்றும் கூறினான். இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதாக வாக்களித்தார்கள். ஆனால் அவர்களின் வாக்கு நீடிக்கவில்லை மறுபடியும் மாறுசெய்தார்கள்.
பனூ இஸ்ராயீலர்களின் நலனுக்காக இறைவனிடம் மன்றாடிய மூஸா (அலை), இறைவனின் அருட்கொடைகளை மறந்து எதற்கும் திருப்தியடையாத யூதர்களை தாம் கட்டுப்படுத்த முடியாது என்று முடிவெடுத்தார்கள். “யா அல்லாஹ்! என்னையும் என் சகோதரரையும் தவிர வேறெவரையும் நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா (அலை) யூதர்களாகிய பனூ இஸ்ராயீலர்களைவிட்டு விலக இறைவனிடம் வேண்டினார்கள்.
இறைத்தூதரே பிரார்த்தித்த பிறகும் இறைவன் விட்டுவைப்பானா என்ன? உடனே இறைவன் “நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிரந்தர பூமியென்று ஒரு பூமி அமையாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அதுவரை அவர்கள் பூமியில் தட்டழிந்து கெட்டலைவார்கள். நீங்கள் இருவரும் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான். அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். வழிதவறியவர்களை அல்லாஹ் அழித்தான்.
திருக்குர்ஆன் 2:51-62, 5:20-26, 5:49-59, 7:148-155

மனிதனுக்கு மிகமிக அவசியமான ஒன்று ‘துஆ’ எனும் பிரார்த்தனை. துன்பங்களை துடைத்தெறியும் மகாசக்தி நமது பிரார்த்தனைகளுக்கு உண்டு.
மனிதனுக்கு மிகமிக அவசியமான ஒன்று ‘துஆ’ எனும் பிரார்த்தனை. துன்பங்களை துடைத்தெறியும் மகாசக்தி நமது பிரார்த்தனைகளுக்கு உண்டு. அதற்கு மிகச்சரியான காலம் தான் இந்த ரமலான்.
சஹர் நேரம், ஐங்காலத் தொழுகைகளின் நேரம், லுஹா (முன்பகல்) தொழுகை நேரம், இப்தார் நேரம், தராவீஹ் தொழுகை நேரம், தஹஜ்ஜத் தொழுகை என ஒரு நோன்பாளிக்கு முழுநேரமும் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம்தான். எனவே இந்நேரங்களை நாம் ஒரு போதும் வீணாகக் கழித்து விடக் கூடாது. நபிகளார் நவின்றார்கள்: ‘துஆ என்பது அதுவே ஒரு வணக்கம் தான்’. (நூல்: அபூதாவூத், திர்மிதி)
‘துஆ– அது தான் அனைத்து வணக்க வழிபாடுகளுக்கும் அசலாய் இருக்கிறது என்றும், அது துன்பங்களையும், சோதனைகளையும் தடுக்கக் கூடியது’ என்றும் நபிகளார் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. நம்மால் முடியாத எந்த ஒன்றையும் நமது பிரார்த்தனையால் அல்லாஹ்வின் அருளால் சாதித்து விட முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘என்னை அழையுங்கள். உங்கள் அழைப்புக்கு நான் பதில் அளிக்கிறேன்’. (திருக்குர்ஆன் 40:60)
அல்லாஹ்வின் சொல் பொய்யாகுமா?, இல்லையே, பிறகு ஏன் இறைவனிடம் கேட்பதற்கு மிகவும் யோசிக்க வேண்டும்?
மூசா நபி அல்லாஹ்வோடு அடிக்கடி பேசிய நபி என்பதை நமக்கு உணர்த்தும் விதமாகத்தான் திருக்குர்ஆன் முழுவதும் சுமார் 135 இடங்களில் அவரது பெயரும், அவர் தொடர்பான சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
நபிகளார் நவின்றார்கள்: ‘மூன்று நபர்களின் துஆ நிராகரிக்கப்படாது; நோன்பாளி நோன்பு திறக்கும் வரை கேட்கப்படும் துஆ, நீதி செலுத்தும் தலைவரின் துஆ, அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ. (நூல்: அஹ்மத், திர்மிதி)
இங்கு முதல் நபராக இடம்பிடித்திருப்பவர் ஒரு நோன்பாளி என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதுவும் அவர் நோன்பு திறக்கும் வரை என்று மிகத்தெளிவாகவே நபிகளார் சொல்லி இருக்கிறார்கள் என்றால் ஒரு நோன்பாளியின் துஆ எவ்வளவு உயர்வானது; உயிரோட்டமுள்ளது என்பதை எளிதாக அறியமுடிகிறது.
எனவே ஒரு நோன்பாளி இயன்றவரை பகல் நேரங்களை அதிகமதிகம் துஆ செய்வதிலேயே கழிக்க வேண்டும். நமக்கு மட்டுமல்ல, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கடும் நோயால் அவதிப்படுபவர்களுக்காக என நமது துஆவின் எல்லையை விரித்துக் கொண்டே செல்லலாம். நாம் அடுத்தவர்களின் தேவைகள் நிறைவேற துஆ செய்கிற போது, நமது தேவைகளை நாம் கேட்காமலேயே அல்லாஹ் நிறைவு செய்கிறான்.
இந்த ரமலானில், நமக்காக, நம் மக்களுக்காக, நம் அனைவருக்குமாக இறைவனிடம் மனமுருகி துஆ செய்வோம்.

உங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவனே எல்லாப் பொருட்களின் மீது விசாலமான ஞானமுடையவன்.
பனூ இஸ்ராயீலர்கள் கேட்ட சட்ட திட்டங்களுக்காக நாற்பது நாட்கள் நோன்பிருந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்துப் பெற்ற தவ்ராத் வேதத்தை எடுத்துக் கொண்டு பனூ இஸ்ராயீலர்களிடம் திரும்பினார்கள் மூஸா (அலை).
பனூ இஸ்ராயீலர்கள் ஒரு காளைக் கன்றை தம் கடவுளாக்கி வழிப்படுவதைக் கண்டு கொதித்துப் போனார்கள் மூஸா (அலை). அல்லாஹ் காட்டிய கருணையையும் பொழிந்த அருளையும் மறந்துவிட்டு மீண்டும் விக்கிர வழிப்பாட்டிற்குத் திரும்பியது பற்றி வினவினார்கள்.
“என்னுடைய சமூகத்தவர்களே! நம் இறைவன் நமக்கு ஓர் அழகிய வாக்குறுதியைக் கொடுக்கவில்லையா? அல்லாஹ் உங்கள் மீது அருள் பொழிந்து பல காலமாகிவிட்டது என்று இப்படிச் செய்தீர்களா அல்லது இறைவனுடைய கோபம் நம் மீது இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” என்று கோபமாகக் கேட்டார்கள்.
அதற்குப் பனூ இஸ்ராயீலர்கள் “ஸாமிரி என்பவர் எங்களிடமிருந்த தங்கத்தை வைத்து இப்படியான ஒரு தங்கக் காளையை எங்களுக்குச் செய்து தந்தார். அந்தக் காளையானது சப்தமிட்டது அதனால் அதுதான் நம்முடைய இறைவன் என்று நாங்கள் வணங்க ஆரம்பித்துவிட்டோம்” என்று விளக்கமளித்தனர்.
மூஸா (அலை) அவர்களுக்குக் கோபம் தலைக்கேறியது. எல்லாக் கோபமும் தன் சகோதரன் ஹாரூன் மீது திரும்பியது. ஹாரூன் (அலை) அவர்களைப் பிடித்து “ஏன் நீங்கள் இவர்களைத் தடுக்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு ஹாரூன் (அலை) அவர்கள் தான் எவ்வளவோ தடுத்துப்பார்த்தாகவும், இது இறைவன் நமக்குச் செய்யும் சோதனை என்பது பற்றியும் எடுத்துக் கூறியதையும், அவர்கள் அதைக் கேட்காமல் தனக்கே கொலை மிரட்டல விடுத்ததையும் எடுத்துக் கூறினார்கள். "மூஸா (அலை) எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இந்தக் காளைக்குச் செய்யும் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று கூறி, தனக்குக் கீழ்ப்பணிய மறுத்துவிட்டதை வேதனையுடன் பகிர்ந்தார்கள்.
மூஸா (அலை) மக்களிடம் "எப்படி ஒரு விக்கிரகம் நன்மையையோ, தீமையையோ உங்களுக்குச் செய்ய முடியும்!? அது சக்தியற்ற ஒரு பொருள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்டுவிட்டு ஸாமிரியைத் தேடிச் சென்றார்கள். அவனிடம் “ஏன் இப்படி மக்களைத் திசை திருப்பினாய்?” என்று வினவினார்கள்.
“மக்கள் தந்த தங்க ஆபரணங்களைக் கொண்டு இப்படியொரு காளையைச் செய்தேன். அதனைக் கத்த வைக்க உங்களிடம் தூது வந்த வானவரின் காலடியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து எறிந்தேன்” என்று தான் செய்த, சூனிய தந்திரத்தை விவரித்தான்.
மூஸா (அலை) ஸாமிரியை அங்கிருந்து போய்விடும்படி கட்டளையிட்டார்கள். "மக்கள் அவனைத் தீண்டாதபடியான நோய் அவனுக்கு வரும். மறுமையிலும் அவனுக்கு அதற்கான தண்டனை தொடரும்" என்றும் எச்சரித்து அனுப்பினார்கள்.
மூஸா (அலை) தம் மக்களிடம் “உங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவனே எல்லாப் பொருட்களின் மீது விசாலமான ஞானமுடையவன்” என்று எடுத்துரைத்தார்கள்.
மேலும் “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை வணங்கி உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டீர்கள். அதனால் உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள். பாவ மன்னிப்பு கேட்டபடி நீங்களே ஒருவருக்கொருவர் மாய்த்துக் கொள்ளுங்கள், அதுவே நீங்கள் உங்களைப் படைத்தவனுக்குச் செய்யும் நன்மையாகும்” என்று மிகவும் கோபமாகச் சொல்லி வெளியேறினார்கள்.
மக்கள் அவர்களின் தவறை உணர்ந்து அந்தக் காளை விக்கிரகத்தைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கி அதனைக் கடலில் சேர்த்துவிட்டார்கள்.
இருப்பினும் அந்தக் கூட்டத்தில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உங்களை நம்ப மாட்டோம்” என்றார்கள்.
வீடுகளே தேவையில்லாத அளவுக்கு மேகத்தையே அவர்களுக்கு நிழலாகத் தந்து, சொர்க்கத்திலிருந்து அவர்களுக்கு ஆகாரத்தைத் தந்தருளிய அருளாளின் அருட்கொடையை மறந்து பேசிய அவர்களின் மீது இறைவனின் கோபம் திரும்பியது.
திருக்குர்ஆன் 20:85-98, 2:54

இருபதாவது சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி ஆரம்பமானது.
துபாயில் இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.
இந்த சர்வதேச குர்ஆன் போட்டி, திங்கள் இரவு ஆரம்பமானது. இதில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த எட்டுப் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக இப்போட்டியை நடுவரில் ஒருவரான அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹசன் அப்துல்லாஹ் அல் அலி அவர்கள் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதித் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் பங்குபெறுகின்ற அனைத்துப் போட்டியாளர்களும், “திருக்குர்ஆனை மனனம் செய்த ஒவ்வொருவரின் கனவும் இப்போட்டியில் பங்குபெறுவது குறித்துத்தான்” என்றனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏமிதீன் பர்குதீனவ் தனது ஆறாம் வயதிலிருந்து குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கி இரண்டு வருடத்திலேயே அதாவது தமது எட்டாம் வயதிலேயே குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தவர். தினமும் ஒன்றரைப் பக்கம் வாசித்து மனனம் செய்வாராம். உலகத்தில் நடக்கும் எல்லாக் குர்ஆன் போட்டிகளிலும் பங்குபெற்று நிறையப் பரிசுகளைப் பெற்றவர் இவர்.
இருப்பினும் துபாய் சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்வதை தமது லட்சியக் கனவு என்றார். குர்ஆனை மீண்டும் மீண்டும் தினமும் வாசித்து மீள்பார்வை செய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை என்றார். “உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமது மொழி அரபியாக இல்லாவிட்டாலும், அரபி மொழியில் இருக்கும் திருக்குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ள வந்திருப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றார்.
திங்கள் இரவில் பங்கேற்றவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த எமிதீன் பர்குதீனவ், மாலத்தீவைச் சேர்ந்த லதீஃப் சுல்தான் முஹம்மது, கத்தாரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ், சாட் நாட்டைச் சேர்ந்த அஹ்மத் முஹம்மத் ஸேன் காலி, டென்மார்க்கைச் சேர்ந்த இஸாம் எல் கல்தி, தஜிகிஸ்தானைச் சேர்ந்த நுமன்யூன் அப்துகாதிரவ், புருண்டி நாட்டைச் சேர்ந்த உவிமானா மற்றும் எதியோப்பியாவைச் சேர்ந்த அஹ்மது முஹம்மது மூஸா.
அதே போல் செவ்வாய் இரவு பங்கேற்றவர்கள் மொரோக்கோவைச் சேர்ந்த அயூப் சக்ரோவி, நைஜீரியாவைச் சேர்ந்த காசிம் ஸாரியா ருஃபாய், பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உத்மான் அகீல் லோன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் ஹாத்ஜி உமர் சய்போடிங், சூடானைச் சேர்ந்த அப்தல்கரீம் அஹ்மது ஃபர்ஹான் அஹ்மத், நார்வே நாட்டைச் சேர்ந்த மஹமத் அப்திரஹ்மான் சாலெஹ் ஹஸன், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லாயீக் ஹத்தாஸ் மற்றும் கசக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஹ்மத் இமரோவ்.
ஒவ்வொரு நாளும் எட்டுப் போட்டியாளர்கள். புதன் கிழமை எகிப்து, அமெரிக்கா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, பாலஸ்தீன், மாலி, போஸ்னியா மற்றும் கொமொரோசு நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.
என்னதான் அவர்கள் பயிற்சி செய்து, பிரயத்தனம் செய்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும் சிறு சிறு தவறுகளை நடுவர்கள் அறிவிக்கும் வண்ணமாக எச்சரிக்கை மணியைப் பலமுறை அடிக்க வேண்டியதாக இருந்தது.

பங்கேற்பாளர்கள் திருக்குர்ஆன் ஓதுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்களைப் போட்டியாளர்களின் இனிமையான அழகான குரல் கட்டிப்போட்டது.
ஒவ்வொரு நாள் போட்டியின் முடிவிலும் குலுக்கல் முறையில் பார்வையாளர்களிலிருந்து ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இலவசமாக உம்ரா பயணம் மேற்கொள்ள வாய்ப்பு தரப்படுகிறது. இந்தப் பரிசை துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல்மக்தூம் அவர்களின் மனைவி மாண்புமிகு ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் அவர்களால் வழங்கப்படுகிறது.
துபாய் வர்த்தக மையத்தில் இப்போட்டி தினமும் இரவு 10.30க்கு ஆரம்பமாகிறது. இப்போட்டி நிகழ்விற்கான அனுமதி இலவசம்.