என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும் - அதற்கான பரிகாரம்
    X

    பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும் - அதற்கான பரிகாரம்

    ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99% அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம்.
    ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99 % அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம். நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்.

    * வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

    * தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

    * மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்

    * தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

    * திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

    * குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

    பரிகாரம்: தமிழ்நாடு, கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல். இதுவே மிகவும் சிறந்த பரிகாரமாகும். இதனை செய்தால் 6 மாதத்திற்குள் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். 
    Next Story
    ×