என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
    X
    நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    புதுவை நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.
    புதுவை நெல்லித்தோப்பில் பிரசித்திபெற்ற புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 170-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பரிபாலகர் அருளானந்தம் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடந்தது. பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.

    முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா வருகிற 15-ந்தேதி மாலை நடக்கிறது. அன்றைய தினம் புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் அபீர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது.

    மறுநாள் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×