என் மலர்
ஆன்மிகம்

பெங்களூரு சீயோன் ஆலயம்
பெங்களூரு சீயோன் ஆலய 31-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை நாளை நடக்கிறது
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயத்தில் நாளை (வியாழக்கிழமை) 31-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை நடக்கிறது.
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் பிரசித்தி பெற்ற சீயோன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 31-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
நாளை காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில், அருட்திரு அறிவர் மோகன்ராஜ் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் கலந்துகொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.
அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.
விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்விதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story