search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தேவைகளை நாமே நிறைவு செய்வோம்

    தன் தேவையை தன் கடமையை நிறைவு செய்ய முடியாதவர்கள் மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர்களாக உருவாக முடியாது.
    பிறரை நம்பி, உழைக்காமல் வாழும் மனிதர்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். என் குழந்தையை சிறப்பாக வளர்க்கிறேன், மரியாதையுடன் நடத்துகிறேன் என்ற பெயரில் எவ்விதமான வேலைகளையும் செய்ய அனுமதிக்காமல் குழந்தைகளை பெற்றோர் வளர்க்கின்றனர். இதனால் குழந்தைகள் எதற்கும் பயன்படாத, எந்த வேலைகளையும் செய்யாதவர்களாக வளர்க்கின்றனர். தான் போர்த்தி படுத்த போர்வையை கூட மடித்து வைக்க தெரியாதவர்களாக தான் குடித்த காபி தம்ளரை கூட கழுவ தெரியாதவர்களாக மாறி விடுகின்றனர்.

    தன் தேவையை தன் கடமையை நிறைவு செய்ய முடியாதவர்கள் மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர்களாக உருவாக முடியாது. தன் தேவையை நிறைவு செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே தன வாழ்க்கைக்கான அட்டவணையையும் தயாரிக்க தெரிந்தவர்கள் ஆவார். தேவையில்லாத காரியங்களுக்கெல்லாம் பிறரை சார்ந்திருக்கும் கலாசாரத்தில் இருநது நாம் வெளிவந்தே ஆகவேண்டும். இந்தியாவிலுள்ள இன்னொரு மோசமான கலாசாரத்தில் ஒன்று ஒரு தலைவர் வருகிறார் என்றால் காலையில் இருந்தே அவருக்காக கால் கடுக்க காத்திருப்து இப்படி தங்களது ஆக்கப்பூர்வமான ஆற்றலை பெரும்பாலானோர் வீணாக்கி வருகின்றனர்.

    அமெரிக்காவில் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடைபெற்றது. போருக்கு தேவையான பொருட்களை பத்து வீரர்கள் சிரமப்பட்டு சுமந்து சென்றனர். அந்த நேரத்தில் அக்குழுவின் தலைவன் குதிரையின் மீது அமர்ந்திருந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தான். அப்போது அங்கு குதிரையில் வந்த ஜார்ஜ வாஷிங்டன், ‘அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே.. நீயும் அவர்களோடு இணைந்து வேலை செய்யலாமே‘ என்றார். உடனே நான் இக்குழுவின் தலைவன் என்ற பதிலளித்தான். உடனே ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களோடு இணைந்து வேலை செய்தார். தலைவன் என்பவன் சொகுசாக வாழ்வதற்கு அழைக்கப்படவில்லை. மக்களோடு களம் இறங்கி உழைப்பவரே தலைவர்.

    இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நமது அடிமை நல உணர்வுகளை உடைத்தெறிவதற்கும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நாமே நிறைவு செய்கிறவர்களாக மாற வேண்டும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×