என் மலர்
ஆன்மிகம்

முட்டம் சகல புனிதர்கள் ஆலய விழாவில் திருப்பலி நடந்த போது எடுத்த படம்.
முட்டம் சகல புனிதர்கள் ஆலய விழாவில் திருப்பலி
முட்டம் சகல புனிதர்கள் ஆலய திருவிழா திருப்பலி நேற்று இரவு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முட்டம் சகல புனிதர்கள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 8-ம் திருவிழாவான நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும் நடந்தது. அருட்பணியாளர் பென்னி தலைமை தாங்கினார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்றனர். இரவு 8.30 மணிக்கு நீங்களும் பாடலாம் என்ற நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு சகல புனிதர்கள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்கு தந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் செய்துள்ளனர்.

Next Story