search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டிமாதா பேராலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பூண்டிமாதா பேராலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    பூண்டி மாதா பேராலய தேர்பவனி- திரளான பக்தர்கள் பங்கேற்பு

    பூண்டி மாதா பேராலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் அன்னையின் சிறு தேர்பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்று வந்தன.

    புனித அன்னை மரியாளின் பிறந்த நாளான நேற்று மாலை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஆரோக்கியராஜேஷ் விக்டர்லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித அன்னையின் பிறப்பு பெருவிழா அலங்கார தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தேரில் புனித அன்னை மரியாளின் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார், தேரை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேர்பவனியையொட்டி திருக்காட்டுப்பள்ளி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் குழுவினர் செய்திருந்தனர். 
    Next Story
    ×