search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தேவசகாயம் மவுண்ட்டில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாக நிகழ்ச்சி சிறப்பு திருப்பலி
    X
    தேவசகாயம் மவுண்ட்டில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாக நிகழ்ச்சி சிறப்பு திருப்பலி

    தேவசகாயம் மவுண்ட்டில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாக நிகழ்ச்சி சிறப்பு திருப்பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க அறிவிக்க வெளியிடப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் புனிதர் பட்ட குழு உறுப்பினர்கள் தேவசகாயம் புனிதர் பட்ட கொடியை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் தேவசகாயம் உயிர் தியாகத்தை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. 2-வது நாளான நேற்று காலையில் திருப்பலி நடைபெற்றது. மாலையில் கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் கில்லாரி தலைமையில் சிறப்பு நன்றி திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை பிரைட், துணை பங்கு தந்தை புரூனோ, பங்கு பேரவை துணை தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், பொருளாளர் சகாய பென்சிகர், துணை செயலாளர் சகாயரூபிலெட் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க அறிவிக்க வெளியிடப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் புனிதர் பட்ட குழு உறுப்பினர்கள் பயஸ் ராய், ஜேக்கப் மனோகரன், சகாய பென்சிகர் உள்ளிட்டோர் தேவசகாயம் புனிதர் பட்ட கொடியை ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் குருகுல முதல்வர் கில்லாரி தலைமையில் திருப்பலி மேடையில் ஏற்றப்பட்டது.
    Next Story
    ×