என் மலர்

    கிறித்தவம்

    புதன் சந்தை அருகே புனித சவேரியார் ஆலய சிறப்பு திருப்பலி
    X
    புதன் சந்தை அருகே புனித சவேரியார் ஆலய சிறப்பு திருப்பலி

    புதன் சந்தை அருகே புனித சவேரியார் ஆலய சிறப்பு திருப்பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாமக்கல் அடுத்த புதன்சந்தை புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் இரவு தேர்பவனி நடந்தது.
    நாமக்கல் அடுத்த புதன்சந்தை அருகே உள்ள ஆர்.சி.கொசவம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலிகள் மற்றும் ஜெப கூட்டங்கள் நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடந்தது. உடுப்பம் ஊராட்சி தலைவர் நாகராஜன் வரவேற்றார். இதில் சேலம் ஆயர் மற்றும் நாமக்கல் மறைவட்ட குருக்கள் டாக்டர் அருள்செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு திருப்பலி செய்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இரவு தேர்பவனி நடந்தது. இன்று (சனிக்கிழமை) நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×