என் மலர்
ஆன்மிகம்

வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றம்
திருச்சியை அடுத்த வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
திருச்சியை அடுத்த வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. இங்கு வீரமாமுனிவர், புனித அருளானந்தர் ஆகியோர் அருள்தந்தையர்களாக பணியாற்றியுள்ளனர். திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என பக்தர்களால் போற்றப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் கலந்து கொண்டு மாதா கொடியினை புனிதப் படுத்தி, பின்னர் கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது பக்தர்கள் அன்னை மரியே வாழ்க எனவும் முழக்கமிட்டனர். பின்னர் ஆலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலய விழா வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணியளவில் மாதாபுரம், கோவண்டா குறிச்சி, ஆலம்பாக்கம், விரகாலூர், விளாகம், ஆரோக்கிய புரம், காமராஜபுரம், விரியூர், புதூர்பாளையம், பளிங்காநத்தம், கோக்குடி, சிலுவைப்பட்டி, வந்தலை, கல்லக்குடி பங்கு இறைமக்கள் சார்பில் சப்பர பவனியும், அருள்தந்தையர்கள் பிரான்சிஸ், ரெஜிஸ், யூஜின், தனிஸ்லாஸ், ஜோசப், அந்தோணி ஜோசப், தெரஸ் நாதன் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது.
வருகிற 7-ந் தேதி மாலை 6.30 மணியளவில் திருவிழா ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. இதில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 11 மணியளவில் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும், 8-ந் தேதி காலை புனித ஆரோக்கிய மாதாவின் பிறப்பு திருவிழா திருப்பலியும், மாலை 4 மணிக்கு மறை மாவட்ட முதன்மைகுருக்கள் ஹென்றி புஷ்பராஜ், தன்ராஜ் ஆகியோர் தலைமையில் ஆடம்பர திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு கன்னியாகுமரி அருள்தந்தை தேவதாஸ் திருவிழா சிறப்புரையாற்று கிறார். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும், வேண்டுதல் சப்பரமும் நடைபெறுகிறது.
9-ந் தேதி மாலை 6.30 மணியளவில் விழா நிறைவு திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருள்தந்தை தங்கசாமி, உதவிப்பங்கு தந்தை வல்லபதாஸ் மற்றும் திருச்சிலுவை கன்னியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இறை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story