என் மலர்
கிறித்தவம்
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 16-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி குருத்தோலை பவனி நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 16-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
அப்போது, வழியோரம் நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி, ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் வருகிற 9-ந் தேதி குருத்தோலை திருநாளாக கொண்டாடுகிறார்கள். இந்த திருநாள் ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் ‘குருத்தோலை ஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது.

அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை, முந்தைய நாள் மக்கள் நேர்ச்சையாகவும், காணிக்கையாகவும் ஆலயங்களுக்கு வழங்குவார்கள். அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 9-ந் தேதி குருத்தோலை பவனி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, ஈஸ்டர் வரை உள்ள நாட்கள் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தவக்காலம் உண்மையான மாற்றத்தை கொண்டுவர, கடவுளின் நெருக்கமான அன்புறவை அதிகமாக தியானிப்போம். இடைவிடாது ஜெபத்தில் நிலைத்திருப்போம்.
“நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல, மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட பேரினம் ஏதாகிலும் உண்டா?“ நம் தந்தையாகிய கடவுள் மனித உயிர்கள் ஒவ்வொன்றையும் நேசிக்கின்றவர். அவர் எப்போதும் தன்னுடைய நெருங்கிய உறவில் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர். (இணைச்சட்டம் 4:7)
இதனை, தொ.நூல் 2:15 வசனம் இவ்வாறு எடுத்துக்கூறுகிறது; மனித குலத்தை படைத்த கடவுள், அவர்களை ஏதோன் தோட்டத்தில் குடியிருக்க செய்தார். கடவுளோடு நெருக்கமான உறவில் வாழ வேண்டிய மனிதன் சாத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து, பாவம் செய்து கடவுளுக்கு தூரமாக போனான் (தொ.நூல் 3:9-10). பாவத்தினால் கடவுளை விட்டு தூரமாக போக வேண்டும், அவரிடம் நெருங்கி வரக்கூடாது என்ற உணர்வு மனிதனை இன்னும் வாட்டி வதைக்கிறது.
இன்றைய காலசூழ்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி மீளமுடியாமல் தவிப்பது, ஆடம்பர வாழ்க்கையில் உண்மை ஆன்மிகத்தை தொலைத்திருப்பது, பணப்பேராசையால் வீழ்ந்து கிடப்பது, மனித சமூகத்தில் நீதி, நியாயங்களை கண்டு பிடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருப்பது, இவைகள் யாவுமே கடவுளை விட்டு தூரமாகவே இருக்க வேண்டும் என்ற பாவ அடிமைத்தனத்தை காட்டுகிறது.

எனவே, கடவுளுக்கு தூரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, கடவுளை நேசிக்க நாம் நெருங்கி வர வேண்டும் என்ற உணர்வை பெற வேண்டும். இயேசுவின் சிலுவைப்பாதைகளை தியானிக்க, தியானிக்க கடவுள் நம்மோடு கொண்டுள்ள நெருக்கமான உறவு புரியும். அதனால் தான் தவக்காலத்தில் ஜெபத்தில் ஈடுபடுவது தலையானது.
மேலே கூறிய இணைச்சட்ட நூல் வசனம் என்பது, நம் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வசனம். தவக்காலம் உண்மையான மாற்றத்தை கொண்டுவர, கடவுளின் நெருக்கமான அன்புறவை அதிகமாக தியானிப்போம். இடைவிடாது ஜெபத்தில் நிலைத்திருப்போம். இறைவனோடு நெருக்கமான உறவில் வாழ ஆசைப்படுவோம்.
அருட்திரு. வே.பீட்டர்ராஜ், பங்குத்தந்தை, ஆத்தூர்.

சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)
பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.

நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.
ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.
சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சாம்சன் பால்

ரோம் நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மரியகோல்பேயின் அழியாத உடல் உறுப்புடன் கிறிஸ்தவர்கள் பவனி சென்றனர். பின்னர் அந்த உடல் உறுப்பு கோவை அருகே உள்ள விசுவாசபுரம் ஆலயத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
போலந்து நாட்டை சேர்ந்தவர் புனித மேக்சி மில்லியன் மரியகோல்பே. இவர் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து கடந்த 1918-ம் ஆண்டு குருவானார். இறைப்பணிகளை செய்து வந்த அவர் 2-ம் உலகப்போரின்போது கைதியாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அந்த சிறையில் இருந்த சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை பெற்றதில் ஒருவருக்கு பல குழந்தைகள் இருந்ததால், அவர் தனது குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தினார். இதனை அறிந்த மரியகோல்பே அந்த கைதிக்கு பதிலாக மரண தண்டனையை தான் ஏற்று கடந்த 1941-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி உயிரை விட்டார். இதன் காரணமாக அவர் சிறைப்பணியாளர்களின் பாதுகாவலர் என்று போற்றப்படுகிறார்.
இவருடைய இறப்பிற்கு பின்னர் அவரால் பல்வேறு புதுமைகள் நிகழ்ந்தன. இதனால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாசபுரத்தில்தான் அவருடைய பெயரில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.
கிறிஸ்தவ மதத்தில் உள்ள சில புனிதர்களின் மறைவுக்கு பிறகும், அவர்களது உடலின் ஏதாவது ஒரு பாகம் அழியாமல் இன்னும் இருக்கிறது. புனித மேக்சி மில்லியன் மரியகோல்பே இறப்புக்கு பின்னர் அவருடைய உடலில் அழியாமல் உள்ள சில உறுப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
புனித பொருளாக கருதப்படும் அந்த உடல் உறுப்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான ரோமில் உள்ள வாடிகன் நகரில் இருந்து விசுவாசபுரம் ஆலயத்துக்கு வழங்கப்பட்டது. இந்த உடல் உறுப்பு நேற்று ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதை ஆலயத்தில் வழிபாட்டுக்காக நிரந்தரமாக வைக்கும் நிகழ்ச்சி சிறப்பு திருப்பலியுடன் நேற்று மாலையில் நடந்தது.
இதில் ஆலய பங்குகுரு ஜோசப் பங்கிராஸ், மதுக்கரை ஆலய பங்குகுரு விக்டர் சந்தியாகு, கப்புச்சின் சபை குருவானவர் ஜோக்கிம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருப்பலி முடிந்த பின்னர் அந்த அழியாத உடல் உறுப்பை ஒரு பேழைக்குள் வைத்து, அதை எடுத்துக்கொண்டு குருவானவர்கள் தலைமையில், கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.
பின்னர் பவனி முடிந்ததும் அவருடைய அழியாத உடல் உறுப்பு இருக்கும் பேழை, ஆலயத்தின் உட்பகுதியில் வழிபாட்டுக்காக நிரந்தரமாக வைக்கப்பட்டது. பின்னர் அந்த உடல் உறுப்பை ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அதை பலர் வழிபட்டு வருகிறார்கள்.

ஏசு பாடுகள் பட்டபோது அவரிடம் கவர்ச்சிகரமான தோற்றம் இல்லை. இதற்காக அவர் துன்பங்களையும், பாடுகளையும் சிலுவையையும் அவர் துறக்கவில்லை.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல ஆனால், மின்னுவதைப் பொன் என்றே நினைத்து ஏமாந்து போகிறோம். பசுத்தோல் போர்த்திய புலி போல கவர்ச்சி என்பது உண்மையின் தோல் போர்த்தி நம்மை மயக்குகிறது. அதன் மடியில் நாம் பல நேரங்களில் விழுந்துவிடுகிறோம்.
நாம் விரும்புபவை நம்மை கவர்கின்றன. நாம் விரும்புபவை அனைத்தும் நல்லது என்று கணித்துவிடமுடியாது. நமக்குத் தேவைப்படாதவை தேவைப்படுவது போலவும், தீயவை நல்லதுபோலவும் காட்சியளிக்கின்றன. இந்தக் காட்சிக்கு நாம் பலமுறை பலியாகிவிடுகிறோம்.
அன்று ஆதாம் ஏவால் சாத்தானால் கவரப்பட்டனர். அவர்களுக்குத் தேவைப்பபடாத கனியைத்தின்றால் அவர்கள் கடவுளைப்போல வாழலாம் என்று அவர்களை நம்ப வைத்தது. சாத்தானின் கவர்ச்சிக்கு பலியாகி விட்டனர். வீட்டில் இருக்கும் குழந்தை ஐஸ் வேண்டும் என அடம்பிடிக்கிறது.

ஒரு வகையில் ஐஸ் அதைக் காந்தம் போல கவர்கிறது. நாமும் அதற்கு ஐஸ் வாங்கிக்கொடுத்து அதை சர்க்கரைக் குழந்தையாக வளர்க்கிறோம். பல பொருட்கள் வாங்கும்போது அவைகள் நமக்கு தேவை இல்லை என்று தோன்றினாலும். அவைகள் நம்மைக் கவர்வதால் கடன்பட்டாவது வாங்கி கவர்ச்சிக்கு பலியாகி துன்புறுகிறோம்.
ஏசு உருமாறியபோதுகூட தாபோர் மலையில் பேதுரு கவர்ச்சிக்கு உள்ளானார். ஏசுவின் உடைகள் மின்னியதையும், அவர் மூலம் பிரகாசித்ததையும் கண்டு அங்கேயே தாபோர் மலையிலேயே கூடாரம் அடித்து தங்கிவிடலாம் என ஏசுவுக்கு யோசனை கூறினார். (மத்: 17 :4) ஏசு பேதுருவின் கவர்ச்சி வசனங்களை நிராகரித்தார்.
ஏசு கவர்ச்சியால் கவரப்பட்டவர் அல்ல சிலுவை ஒரு கவர்ச்சியான கருவி அல்ல அந்த சிலுவையை ஏசு கவர்ந்தார். சிலுவையில் நமக்கு மீட்பு அளித்தார். ஏசு பாடுகள் பட்டபோது அவரிடம் கவர்ச்சிகரமான தோற்றம் இல்லை. இதற்காக அவர் துன்பங்களையும், பாடுகளையும் சிலுவையையும் அவர் துறக்கவில்லை. நாமும் மேலோட்டமாக எண்ணி கவர்ச்சிக்கு இரையாகாமல் உண்மைக்கு சான்று பகிர்ந்து வாழ்வோம்.
-அருட்தந்தை.சி.குழந்தை, காணியிருப்பு.

இறைவன் கொடுத்த வாழ்வை புதுமையோடு, புனிதத்தன்மையோடு நிறை மனித வாழ்வால் வாழ முயற்சிப்போம். தவக்காலத்தை கொண்டாடுவோம். புதிய கிறிஸ்துவாக மாறுவோம்.
கடவுள், எந்நாளும் பேரன்பு, பெரும் கருணை மிக்கவர். நீ குணம் பெற விரும்புகிறாயா? பாவ வாழ்வில் இருந்து விடுபட விரும்புகிறாயா? மகிழ்ச்சியாக வாழ ஆசையா? அமைதியான உள்ளம் வேண்டுமா? இவைகள் யாவும் ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மை பார்த்து கேட்கும் கேள்விகளாக அமைகின்றன.
நாம் மகிழ்ச்சியாக வாழத்தான் இறைவன் விரும்புகிறார். நாம், உடனடியாக ‘ஆம்‘ என்று பதிலளிப்பதற்கு பதிலாக இப்போது வேண்டாம் என நினைக்கின்றோம். அதற்கு காரணம், வலிகளோடும், வேதனைகளோடும் வாழ பழகி விட்டோம். இதிலிருந்து விடுபட வேண்டும், இயேசுவால் தொடப்பட வேண்டும் எனில், நாம் பல சவால்களை சந்தித்தாக வேண்டும்.
இது ஒரு அழைப்பு. நேர்மையான, உண்மையான, ஒழுக்கமான, உன்னதமான வாழ்வை வாழ வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம். “கேளுங்கள் கொடுக்கப்படும்“ என்ற இறைவன், கொடுத்தபின் நிலை வாழ்வு வாழ நம்மை அழைக்கிறார். ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ என்ற பழமொழி போல் போகிறபோக்கில் இறைவனின் ஆசீரும் வேண்டும், நம் மனம் போன போக்கில் விரும்பியபடி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எவ்வாறு ஒரு ஊழியன் இரு தலைவர்களுக்கு ஊழியம் புரிய முடியும்?

“இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்” (எசாயா 65:17) என்று இறைவன் புதியன விரும்புகிறார். ஆனால் நாமோ பழைய அழுக்கான, பாவமான, துன்பமான, கண்ணீரோடு வாழத்தான் ஆசைப்படுகிறோம். இயேசுவின் வாழ்வையும், வார்த்தைகளையும் நம்பி அவராக வாழ அழைக்கப்படுகிறோம்.
புதிய உலகம் படைக்க சக்தி பெறுகிறோம். ஆனால் நம் பலவீனத்தால் மீண்டும், மீண்டும் நம்மை நாமே வீழ்த்தி குறைவில் நிறைவு காண்கின்றோம். இறைவன் கொடுத்த வாழ்வை புதுமையோடு, புனிதத்தன்மையோடு நிறை மனித வாழ்வால் வாழ முயற்சிப்போம். தவக்காலத்தை கொண்டாடுவோம். புதிய கிறிஸ்துவாக மாறுவோம்.
அருட்பணி. ஜோ, சலேசியன் சபை, உதவிப்பங்குத்தந்தை, சவேரியார் பாளையம் பங்கு.

நாம் இறைவனின் பாதத்தைப் பற்றிக்கொண்டால் சந்தோஷம், சமாதானம், விடுதலை, ஜெயத்தை பெற்றுக் கொள்ளலாம், ஆமென். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
‘மரியாள் என்ற ஒரு சகோதரி இருந்தாள். அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்’ (லூக்கா 10:39).
எருசலேமிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் பெத்தானியா கிராமத்தில் குஷ்டரோகியாக இருந்த சீமோன், குடும்பமாக இறைவனை நேசித்தான். அவனுடைய குஷ்டரோகத்தை குணமாக்கினார். அவனுக்கு மார்த்தாள், மரியாள், லாசரு என்ற பிள்ளைகள் இயேசுவினிடத்தில் மிகுந்த அன்புகூர்ந்த காரணத்தால் அந்த வீட்டில் இயேசு பிரவேசித்தார்.
‘மரியாள்’ என்றால் ‘கண்ணீர்’ என்று அர்த்தம். மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து தேவனுடைய வசனத்தை கேட்டாள். மார்த்தாளோ அநேக வேலைகளை செய்து மிகவும் வருத்தமடைந்து, ‘ஆண்டவரே நான் தனிமையில் வேலை செய்கிறேன். என் சகோதரியை அனுப்பும்’ என்றாள்.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக ‘மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறாய். தேவையானது ஒன்றே. மரியாள் தன்னை விட்டுவிடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்’ என்றார்.
மரியாள் ஆண்டவரின் பாதத்தை பற்றிக்கொண்டு தேவ காரியங்களை தெரிந்து கொண்டாள்.
நாம் முழுக்குடும்பமாக தேவனை நேசிக்கும்போது தேவ ஆசீர்வாதங்களை பெறுகின்றோம். தேவனும் நமது குடும்பத்தையும் நேசிக்கிறார்.
‘கர்த்தருக்குப் பரிமள தைலம் பூசி தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே’. (யோவா.11:2)
இயேசுவுக்கும் சீடர்களுக்கும் சீமோன் வீட்டில் இரவு விருந்து அளித்தனர். மார்த்தாள் பணிவிடை செய்தாள். மரியாள் விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றி பாதங்களில் பூசி தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். மிகுந்த பணிவும் அன்பும், மரியாதையும் செலுத்தினாள்.
மரியாள் தன்னை மிகவும் தாழ்த்தி ஆண்டவருக்கு அடிமையென்பதை வெளிப்படுத்தினாள். அந்த வீடு முழுவதும் பரிமள தைலத்தின் வாசனையினால் நிறைந்து இருந்தது.
இயேசு சொன்னார்: ‘மரியாள் என்னிடத்தில் நற்கிரியைகளைச் செய்திருக்கிறாள். இந்த தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செயல். என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். மரியாளின் நற்குணங்கள் இறைவனின் இருதயத்திற்கு ஏற்றதாக இருந்தது. நாமும் ஆண்டவருக்கு பிரியமான காரியங்களை செய்யும்போது தேவனே நமக்கு சாட்சியாக இருப்பார்’.
‘பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்’ (யோவா.11:1).

தன் சகோதரன் லாசரு வியாதிப்பட்டவுடன் மார்த்தாள், மரியாள் இயேசுவுக்கு தகவல் தெரிவித்தார்கள். இயேசு, மார்த்தாள், மரியாள், லாசருவினிடத்தில் மிகுந்த அன்பாக இருந்தார். இயேசு வர காலதாமதம் ஆனபோது லாசரு மரித்துப்போனான். குகை போன்ற ஒரு கல்லறையில் வைக்கப்பட்டு அதன்மேல் ஒரு கல்லை வைத்தார்கள்.
நாலு நாளான பின்பு பெத்தானியா கிராமத்திற்கு இயேசு வந்தார். மார்த்தாள், மரியாள் இருவரும் இயேசுவின் பாதத்தில் விழுந்து ‘ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரேயானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்’ என்று கண்ணீர் விட்டு கூறினார்கள். தேவன்மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை இது வெளிப்படுத்துகிறது.
மார்த்தாள், மரியாள் அழுகிறதையும் அவர்களோடு இருந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கி துயரமடைந்து இயேசு கண்ணீர் விட்டார். அவர்கள்மேல் வைத்த அன்பை வெளிப்படுத்தினார். ‘அவனை எங்கே வைத்தீர்கள்?’ என்று கேட்டு கல்லறையினிடத்திற்கு வந்தார். கல்லறையின் மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார்.
மார்த்தாள், ‘ஆண்டவரே இப்பொழுது நாறுமே நாலு நாளாயிற்றே’ என்றாள்.
இயேசு, ‘நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்’ என்று சொல்லி, ‘பிதாவே நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்’ என்று கூறினார். பின்னர் ‘லாசருவே வெளியே வா’ என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார். மரித்தவன் உயிரோடு வெளியே வந்தான். அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
லாசருவின் சரீரம் துணியினால் கட்டப்பட்டு இருந்தது. ‘இவனை கட்டவிழ்த்து விடுங்கள்’ என்றார். கட்டவிழ்த்த போது புது மனுஷனாக இருந்தான். அனைவரும் அவரை விசுவாசித்தார்கள். பிரதான ஆசாரியரும், பரிசேயரும், ஆலோசனை சங்கத்தாரும் ‘இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறார். உலகமே அவருக்கு பின் செல்கிறது’ என்றார்கள்.
மரியாள் இயேசுவின் பாதத்தைப் பற்றிக் கொண்டாள். தேவ வார்த்தையைக் கேட்டாள். விசுவாசம் வைத்தாள், அன்பு கூர்ந்தாள், தேவனை தேடினாள், மரித்து போன தன் சகோதரனை உயிருடன் மீட்டுக்கொண்டாள்.
அவர் பூமியிலிருந்த போது எல்லோருக்கும் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். அதைப்போல அற்புதங்களும், அதிசயங்களும் உலகம் முழுவதும் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்.
நாம் இறைவனின் பாதத்தைப் பற்றிக்கொண்டால் சந்தோஷம், சமாதானம், விடுதலை, ஜெயத்தை பெற்றுக் கொள்ளலாம், ஆமென்.
அயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.

தவக்காலம் என்னும் ஓய்வு நேரத்தில் மனங்களை இளைத்து மனித-இறை உறவை சீராக்கி ஒளிரச்செய்வோம். இறைத்துணையை வேண்டி நம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
ஆன்மிக வாழ்வு அற்புதமானது. அத்தகைய வாழ்வு நமக்கு பல சிறப்புகளை பெற்றுத்தருகிறது. அதுபோன்ற ஒரு சிறப்பான வாழ்விற்கு தவக்காலம் நமக்கு அடித்தளமிடுகிறது. தவக்காலம் ஒரு ஓய்வு காலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை விட்டாச்சு, நன்றாக உறங்கலாம் என்று பலர் நினைப்பார்கள். உழைப்பாளர்கள் தங்களின் இடைவேளை நேரத்தில், தாங்கள் பயன்படுத்தும் கருவிகளை கூராக்குவார்கள். அதுபோல இறைவனுக்கும் நமக்குமான உறவை சீராக்க வேண்டும். அதற்கு இந்த தவக்காலம் உதவும்.
வேகமாக சுழலும் மின்விசிறி பார்ப்பதற்கு சுழலாமல் இருப்பதை போன்று தோன்றும். ஆனால் அது வேகமாக சுழன்று கொண்டு தான் இருக்கிறது. அதுபோல நமது பூமியை உள்ளடக்கிய அண்டம் இடைவிடாது இயங்கி கொண்டு இருக்கிறது. வானத்தை பார்த்தால் அனைத்தும் நிலையாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அவை முழுவதும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன.

இயற்பியலின் கருத்துப்படி ஒவ்வொரு பருப்பொருளுக்கும் ஒரு அதிர்வெண் உண்டு. ஒரே அதிர்வெண் கொண்ட பருப்பொருட்கள் இயைந்து செல்லும் போது ஒத்த அதிர்வு உண்டாகிறது. அதுபோல மனிதருக்கும் ஒரு அதிர்வெண் உண்டு. ஜெபம், தவம், பக்தி, முயற்சி ஆகியவற்றால் நாமும் இறையோடு இணைய முடியும். இதற்கு சில தடைகள் உள்ளன. அந்த தடைகளை கீழ்க்காணும் வழிகளில் தடுக்கலாம்.
நான் பாவி என உணர்வது (1 திமொ 1:15), மனம் திருந்தி மனமாற்றமடைவது (திபா 51), இறைவனிடம் திரும்பி வருவது (லுக் 15:18-19), இறைவனின் இரக்கத்தை அனுபவிப்பது (விப 34:6), மீட்படைவது (எசா 44:22) ஆகியவை தடைகளை வெல்லும் வழிமுறைகள் ஆகும்.
மரங்களை இழைத்தால் பலகைகள் பொலிவு பெறும். அதற்கு ஓய்வு நேரத்தில் கருவிகளை கூர்மை படுத்த வேண்டும். அதுபோல மனங்களை இழைத்தால் மனிதம் ஒளிரும். எனவே தவக்காலம் என்னும் ஓய்வு நேரத்தில் மனங்களை இளைத்து மனித-இறை உறவை சீராக்கி ஒளிரச்செய்வோம். இறைத்துணையை வேண்டி நம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
அருட்திரு. ஆ.லியோ ஜோசப், உதவி பங்குத்தந்தை,
கொசவபட்டி.

பாவிகள் திருந்த வேண்டும்; திருந்தி தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இதைத்தான் இயேசு பிரான், நற்செய்தியில் பல இடங்களில் எடுத்தியம்புகிறார்.
இயேசு பிரான் இவ்வுலகில் போதித்த காலத்தில், வரி வாங்குவோரும், பாவிகளும் அவர் சொல்வதைக் கேட்க அவரை நெருங்கி வந்தார்கள். இதைக் கவனித்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், “இவர் பாவிகளை வரவேற்கிறார்; அவர்களோடு உணவருந்துகிறார். இது எப்படி?” என்று தங்களுக்குள்ளேயே முணுமுணுத்தனர்.
அப்பொழுது அவர் அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:
ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மகன்களில் இளையவர், தன் தந்தையிடம், ‘அப்பா! சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டார். இதனால் தந்தை சொத்தைப் பகிர்ந்து அளித்தார். எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு தொலைதூரத்திற்கு நீண்ட பயணம் மேற்கொண்டார். அங்கு தாறுமாறாக வாழ்ந்து, வாங்கிச் சென்ற சொத்துகளைப் பாழாக்கினார். எல்லாவற்றையும் செலவு செய்தார்.
பின்பு அவர் சென்ற நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அவர் வறுமையில் வாடினார். வேறு வழி தெரியவில்லை. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம், அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்ப்பதற்குத் தன் வயலுக்கு அனுப்பினார். அவர் பன்றிகளுக்கு வைக்கப்படும் தவிடுகளைத் தின்று, தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள விரும்பினார். அதை அவருக்குக் கொடுப்பதற்குக்கூட ஆள் இல்லை. பிறகு அவருக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்டது.
“என் தந்தை வீட்டில் கூலி வேலை செய்பவர்களுக்குக் கூட தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கும். நான் இங்கு பசியால் செத்துக் கொண்டிருக்கிறேனே! நான் உடனே புறப்பட்டு என் தந்தையிடம் சென்று, என்னை கூலியாளாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.
உடனே தந்தையிடம் சென்றார். தொலைதூரத்தில் தன் மகன் வருவதைப் பார்த்த தந்தை அவர் மேல் இரக்கம் கொண்டு ஓடிப்போய், ஆரத்தழுவி மகனை முத்தமிட்டார். மகனோ அவரிடம், “அப்பா! இறைவனுக்கும் உமக்கும் எதிராகப் பாவம் செய்தேன். நான் இனிமேல் உங்கள் மகனாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன்” என்றார்.
தந்தை அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தம் பணியாளரிடம், “முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். மகிழ்ந்து விருந்து வைப்போம். ஏனென்றால் என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போன மகன் திரும்பவும் கிடைத்துள்ளான்” என்றார். மகிழ்ச்சியுடன் அனைவரும் விருந்துண்ண தொடங்கினார்கள்.

வயலில் இருந்து மூத்த மகன் வீட்டை நெருங்கி வரும்போது ஆடல் பாடல்களைக் கேட்டார். பணியாளர்களில் ஒருவரை அழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று கேட்டார்.
“உம் தம்பி வந்திருக்கிறார். அவர் நம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால், உம் தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார்” என்றார்.
கோபம் கொண்ட மூத்த மகன், உள்ளே செல்ல மனம் இல்லாமல், அங்கேயே நின்றார். அவருடைய தந்தை வெளியே வந்து, உள்ளே வரும்படி கெஞ்சிக் கேட்டார்.
அதற்கு அவர், ‘இத்தனை ஆண்டுகளாக, அடிமை போன்று உங்களுக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை என்றுமே மீறியதில்லை. இருப்பினும் என் நண்பர்களோடு நான் மகிழ்ந்து கொண்டாட, ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட, எனக்குத் தந்ததில்லை. ஆனால் உம் சொத்துகளை எல்லாம் அழித்து விட்டு வந்த உம் மகனுக்காகக் கொழுத்த கன்றை அடித்து விருந்துண்ணுகிறீரே?’ என்று கேட்டார்.
அதற்குத் தந்தையார், மூத்த மகனை நோக்கி, “மகனே! நீ எப்போதும் என்னிடம் இருக்கிறாய். என்னுடையது அனைத்தும் உன்னுடையதே! இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். உன் தம்பி இறந்து போனவன் மீண்டும் வந்துள்ளான். காணாமல் போனவன் கிடைத்துள்ளான்” என்றார்.
இயேசு சொன்ன இந்தச் சம்பவத்தைப் படிப்போர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
“பாவிகளோடு விருந்துண்ணுகிறாரே” என்று கேட்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இச்சம்பவத்தைச் சொல்லி விளக்குகிறார்.
பாவிகள் திருந்த வேண்டும்; திருந்தி தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இதைத்தான் இயேசு பிரான், நற்செய்தியில் பல இடங்களில் எடுத்தியம்புகிறார். இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றியதே, பாவிகளைத் திருத்தி நல்வழியில் சேர்க்கத்தான்.
எவரிடம் பாவமில்லை. மனிதர்கள் பாவத்தை, அறிந்தும் அறியாமலும் செய்கிறார்கள். எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. பாவிகளை ரட்சிக்கவே மனுமகன் இந்த உலகில் தோன்றினார்.
இதை நன்கு உணர்ந்து கொண்டால், யாரையும் யாரும் வெறுத்து ஒதுக்க மாட்டார்கள்.
புனித லூக்கா எழுதிய நற்செய்தியின் உட்கருத்தை உணர்வோம். உணர்ந்து பின்பற்றுவோம்.

தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
“கடவுளின் கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.“ இந்த வசனம், நம் கடவுள் கருணை மிகுந்தவர், வாழ்நாள் முழுவதும் அந்த கருணையை நம்மீது பொழிகின்றார் என்ற இறை செய்தியை வெளிக்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி விவிலியம் முழுவதும் இந்த செய்தி முதன்மையாக இடம் பெறுகிறது.
ஊர் மக்களால் பாவி என்று ஒதுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சக்கேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றார். அவரோடு தங்கினார். இந்த கருணைக்கு பரிசு; சக்கேயு மனம் திரும்பி, கடவுளின் மகனாக வாழ்ந்தார். (லூக்கா 19:6-9)
கல்லால் எரிந்து கொல்லப்படுவதே விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை என இழுத்து வரப்பட்ட பெண் இயேசு முன் கூனிகுறுகி நின்றாள். இயேசு அவளை கருணையோடு பார்த்து, அந்த தண்டனையிலிருந்து விடுவித்தார். அந்த கருணையின் விளைவு; விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மனம் மாறி நல்வாழ்வு வாழ்ந்தாள். (யோவான் 8:10-11)

நம் கடவுள் கருணையின் கடவுள். பழிவாங்கும் கடவுள் அல்ல. எனவே தான் இயேசுவை உலகிற்கு அனுப்பிய நம் தந்தையாகிய கடவுள், அந்த இறை கருணையையே வலிமையான ஆயுதமாக கொடுத்து அனுப்பினார். இயேசு நம் பாவங்களுக்காக தன்னையே தியாகமாக்கினார். கடவுளின் கருணையை நிலைநாட்டினார்.
இறை கருணையை நாம் அதிகமாக தியானிக்கிறபொழுது தான் ஆன்மிகத்தில் முதிர்ச்சி அடைய முடியும். நம் பாவங்கள் நம்மை விட்டு அகலும். நல்லதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். எனவே தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

“இதோ, நான் புதிய காரியத்தை செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசாயா 43:19)”

இந்தியாவிற்கு கிறிஸ்தவ சுவிசேஷத்தை சுமந்து வந்த மிஷனரிகளில் மிக முக்கிய மாணவர் வில்லியம் கேரி. அவர் இந்தியாவிற்கு வந்து இந்திய மொழிகளை கற்று இந்தியர் களுக்கு ஏசு கிறிஸ்துவை பற்றி நற்செய்தி அறிவித்தவர். தொடக்கத்தில் அவர் வங்காள மொழியை கற்று அந்த மொழியில் புதிய ஏற்பாட்டு வேதாகமத்தை சுமார் 12 ஆண்டுகால கடும் முயற்சியில் மொழி பெயர்ப்பு செய்தார். ஆனால் அச்சகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் அனைத்தும் எரிந்துபோனது. எவ்வளவு பெரிய வேதனையான நிகழ்வு இது. எண்ணிப்பாருங்கள்.
ஆயினும் அவர் தன்னை திடப்படுத்திக்கொண்டு, மீண்டும் மொழி பெயர்ப்பு பணியில் இறங்கினார். இரண்டாவது மொழி பெயர்ப்பு முதல் மொழிபெயர்ப்பை விட மிக சிறப்பானதாகவும், தவறுகள் தவிர்க்கப்பட்டதாகவும் இருந்தது. ஒரு விபத்து ஒரு பெரிய முயற்சியின் பலனை அழித்துப்போட்டது போல தோன்றினாலும் உண்மையில் சிறப்பான ஒன்று உருவாவதற்கே அது வழிவகுத்தது.

ஆம். கடவுள் சில நஷ்டங்கள் வாயிலாகவும், சில லாபங்களை உருவாக்குகிறார். சில நேரங்களில் நமக்கு நிகழ்கின்ற சில காரியங்கள் எந்த விதத்திலும் நன்மையானது என்று பார்க்க முடியாத அளவிற்கு தீமையானவையே ஆனால், நாம் கடவுளோடு இருந்தால் அந்த தீமையின் நடுவிலும் கடவுள் ஒரு நன்மையை உருவாக்குகிறார்.
நம்முடைய வாழ்க்கையின் எந்தவொரு தோல்வியின் நடுவிலும், நஷ்டத்தின் நடுவிலும், ஏமாற்றத்தின் நடுவிலும் கடவுளை உறுதியாக பற்றிக்கொண்டு வாழ பழகிக்கொள்ளவேண்டும். அப்பொழுது அந்த தோல்விகளையும் நஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் கடவுள் உபயோகித்து ஒரு ஆசீர்வாதமான ஒன்றை ஏற்படுத்த வல்லவராயிருக்கின்றார்.
நகோமிக்கு நிகழ்ந்தவைகள் யாவும் வேதனையானவைகளே. அவற்றை நன்மைகள் என கூற முடியாது. ஆனால் அந்த தீமையான சூழல்களை கடவுள் பக்குவமாக உபயோகித்து ஒரு நன்மையான சூழலை உருவாக்கினார் என்பது எத்தனை ஆறுதலான விஷயம்.
சில குடும்பங்களில் ஏற்பட்ட வியாபார தோல்வி, மரணங்கள், உறவு பிரிந்த நிலைகள் வேலை இழப்புகள், திருமண தடைகள், சிலரால் இழைக்கப்பட்ட மிக மோசமான அநீதிகள் போன்றவை அந்தந்த குடும்பங்களை கடுமையான வேதனைக்குள் தள்ளியிருக்கின்றன. ஆனால் அவைகளின் நடுவில் கடவுளை உறுதியாக பிடித்துக்கொண்டதால் கடவுள் கேடானவைகளின் நடுவிலும் செயல்பட்டு முந்தியிருந்ததைவிட மிக மேன்மையான சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.
“ தொடக்கத்தில் நீ பெற்ற சில தோல்விகள், எதிர்கால வெற்றிகளை தக்கவைக்கும் முள்வேலிகள்.”

திருவண்ணாமலையில் இருந்து விருது விளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு திரளான கிறிஸ்தவர்கள் தவக்கால புனித பாதயாத்திரை சென்றனர்.
கிறிஸ்தவர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான புனித வெள்ளி வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கிறார்கள்.
இதையொட்டி ஆண்டு தோறும் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் விருதுவிளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு தவக்கால புனித பாதயாத்திரை செல்வது வழக்கம்.
அதன்படி, திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள உலகமாதா தேவாலயத்தில் இருந்து அருட்தந்தை ஞானஜோதி தலைமையில், 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருது விளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு தவக்கால புனித பாதயாத்திரை தொடங்கியது.
திருக்கோவிலூர் சாலை வழியாக விருது விளங்கினான் காட்டுக்கோவிலுக்கு புனித பாதயாத்திரை சென்றனர். அப்போது பவித்திரம், கல்லேரி, அல்லிகொண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், பெருமணம், வன்னியநகரம், அத்திப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் புனித பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
புனித பாதயாத்திரையின் போது திருப்பலி பாடல்களை பாடியபடி திரளான கிறிஸ்தவர்கள் நடந்து சென்றனர். அதைத் தொடர்ந்து விருது விளங்கினான் காட்டுக்கோவில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் கூட்டுத்திருப்பலி நடந்தது.
இதில் வேலூர் மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ராபர்ட், அந்தோணிசாமி, திருத்தல அதிபர் அருட்தந்தை டேனியல், ஜீவகன், தாளாளர் யேசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.