search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நாங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை- மைக்கேல் வாகனின் விமர்சனத்திற்கு பாண்டியா பதில்
    X

    நாங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை- மைக்கேல் வாகனின் விமர்சனத்திற்கு பாண்டியா பதில்

    • இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார்.
    • ஒன்றரை வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வருவதால், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவர்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். சர்வதேச அளவில் விளையாடும் போது நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபிக்க அவசியமில்லை என நினைக்கிறேன். இது ஒரு விளையாட்டு, இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். அதற்கான முடிவுகள் நடக்கும் போது நிச்சயம் நடக்கும். நாங்கள் இன்னும் டி20 கிரிக்கெட்டில் சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    அதனை வருங்காலங்களில் சரி செய்து சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் நீங்கள் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் . முன்னேறிச் செல்வது மட்டும்தான் ஒரே வழி.தவறுகளை திருத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

    அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த டி20 உலக கோப்பைக்கான பயணம் நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது.

    அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அமர்ந்து பிறகு யோசிப்போம். இப்போது எங்களுடைய வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்ப.ம் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செய்யப்படவுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது

    Next Story
    ×