என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்- பாபர் அசாம் விருப்பம்
- இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என ரமீஸ் ராசா கூறியிருந்தார்.
- இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த 1992-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றிருந்தது.
கராச்சி:
பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராசா சொல்லி இருந்தார்.
பாகிஸ்தானில் திட்டமிட்டபடி ஆசியக் கோப்பை தொடர் நடைபெறுமா, அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற சூழல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என பாபர் அசாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாபர் அசாம் கூறியதாவது:-
நான் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு எனது பிரதான இலக்கு என்னவென்றால், அது நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சதம் விளாசுவது மற்றும் பெஷாவர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதும்தான்.
அதேபோல நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் எனவும் விரும்புகிறேன். எனக்கு எங்கள் அணி வெற்றி பெறுகின்ற அணியாக இருக்க வேண்டும்.
நான் சில புதிய ஷாட்களை முயற்சித்து வருகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடைக்கும் பட்சத்தில் போட்டிகளில் அதை அப்ளை செய்து விளையாடுவேன். அதே நேரத்தில் எனது வழக்கமான பாணியில் எனது ஆட்டத்தை தொடருவேன்.
என பாபர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த 1992-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






