search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அதிரடியின் ரகசியம் என்ன?- வெளிப்படுத்தும் அபிஷேக் சர்மா
    X

    அதிரடியின் ரகசியம் என்ன?- வெளிப்படுத்தும் அபிஷேக் சர்மா

    • அபிஷேக் சர்மா 22 பந்தில் 68 ரன்கள் விளாசினார்.
    • 3 பவுண்டரி, 7 சிக்ஸ் விளாசிய அவர், ஐதராபாத் அணிக்காக அதிவே அரைசதத்தை பதிவு செய்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிளிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இலக்கை துரத்தியபோது 209 ரன்கள் தேவை என்ற நிலையில் 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    நேற்று மும்பை அணிக்கெதிராக 277 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது. இரண்டு போட்டிகளிலும் 23 வயதேயான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். கொல்கத்தா அணிக்கெதிராக 19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் விளாசினார்.

    நேற்று 22 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். மேலும் ஐதராபாத் அணிக்காக அதிவேக (18 பந்தில்) அரைசதத்தை பதிவு செய்தார்.

    இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவர் டிராவிட் ஹெட் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் (22 பந்தில்) குவித்தது குறிப்பிடத்தக்கது.

    தனது அதிரடிக்கு அணி நிர்வாகம் வழங்கியுள்ள சுதந்திரம்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உண்மையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் என்று நான் உணரவில்லை. வழக்கம்போல் நான் அரைசதம் அடித்ததும் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அவுட்டாகி வெளியே வந்த பின்னர்தான் அதிவேக அரைசதம் என உணர்ந்தேன். அதை நான் ரசித்தேன்.

    இந்த போட்டிக்கு முன்னதாக பேட்ஸ்மேன் அனைவருக்கும் மிகவும் எளிதான தகவல் பரிமாறப்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த தகவல், ஒவ்வொருவரும் களத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடைய அற்புதத்தை (தங்களுக்குள் இருக்கும் திறமையான ஆட்டம்) வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நீங்கள் இதை பெறும்போது, அது மிகப்பெரிய நேர்மறையான தகவலாக இருக்கும். இது உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஆதரவாக இருக்கும்.

    எனக்கு மிகவும் பிடித்தவரான டிராவிட் ஹெட் உடன் இணைந்து பேட்டிங் செய்தேன். அவருடன் இணைந்து பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்தேன்.

    இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்தார்.

    Next Story
    ×