என் மலர்

  கிரிக்கெட்

  டோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
  X

  எம்எஸ் டோனி - ரிஷப் பண்ட் 

  டோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் வீரேந்திர சேவாக் முதல் இடத்தில் உள்ளார்.
  • இங்கிலாந்தில் இரண்டு சதங்களை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார்.

  இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 98 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ரிஷப் பண்ட்- ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

  ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா அரை சதம் விளாசினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக சதம் அடித்ததன் மூலம் டெஸ்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை ரிஷப் பண்ட் பிடித்தார்.

  முதல் இடத்தில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளார். அவர் 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 78 பந்தில் சதம் அடித்தார். 1990-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அசாருதீன் 88 பந்தில் சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரிஷப் பண்ட் 89- பந்தில் சதம் அடித்துள்ளார்.

  இதேபோல் அதிவேகமாக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்களில் டோனி சாதனையை பண்ட் முறியடித்தார். 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டோனி 93 பந்துகளில் சதம் விளாசினார். அதனை பண்ட் முறியடித்துள்ளார். அவர் மேலும் இரண்டு சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

  ஒரு ஆண்டில் இரண்டு சதங்களை அடித்த நான்காவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் பண்ட் படைத்துள்ளார். 24 வயதில் வெளிநாட்டு மண்ணில் இரண்டு சதம் அடித்தவர்கள் பட்டியலில் பண்ட் மட்டுமே இருந்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் அவர் சதம் அடித்திருந்தார்.

  இங்கிலாந்தில் இரண்டு சதங்களை அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பண்ட் 2018 சுற்றுப்பயணத்தின் போது ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 2000 ரன்களை கடந்துள்ளார்.

  Next Story
  ×